பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

55


தில் உலரும் தானியங்களைத் தின்று பொதுவிடத்தின் கண்ணுள்ள எருவினது நுண்ணிய பொடியைக் குடைத்த விளையாடி வீட்டின், இறப்பில் தம்முடைய குஞ்சுகளோடு தங்கியிருக்கும். பிரிந்து உறைபவருக்குத் துன்பத்தைத் தரும் மாலைக் காலமும் தனிமையும் தலைவர் பிரிந்து சென்ற நாட்டில் இல்லை போலும்” என்றாள் தலைவி.

10. அவன் மணந்த தோள்

ஐயவி அன்ன சிறு வீ ஞாழல் செவ்வி மருதின் செம்மலோடு தாஅய்த் துறை அணிந்தன்று, அவர் ஊரே இறை இறந்து இலங்கு வளை நெகிழச், சாஅய்ப் புலம்பு அணிந்தன்று, அவர் மணந்த தோளே.

- குன்றியனார் குறு 50 “வெண்சிறு கடுகைப் போன்ற சிறிய பூக்களை உடைய ஞாழல் மரத்தின் பூவானது, செம்மையாகிய மலர்களை உடைய மருத மரத்தின் பழம்பூவோடு சேர்ந்து தலை வருடைய ஊரினிட்டத்தில் உள்ள நீர்த்துறையை அழகு செய்த்து. அவர் முன்பு அளவளாவிய என் தோள்வளை, முட்டியைக் கடந்து நெகிழும்படி தனிமையில் மெலிந்து கிடந்தது.” என்று தலைவி தலைவனின் தூதுவரிடம் உரைத்தாள். -

11. உறுதி மொழிகள் துன்புறுத்தின எம் அணங்கினவே - மகிழ்ந முன்றில் நனை முதிர் புன்கின் பூத் தாழ் வெண் மணல், வேலன் புனைந்த வெறி அயர் களம்தொறும் செந்நெல் வான் பொரி சிதறி அன்ன, எக்கர் நண்ணிய எம் ஊர் வியன் துறை, நேர் இறை முன்கை பற்றிச், சூரர மகளிரோடு உற்ற சூளே.

- கோப்பெருஞ்சோழன் குறு 53 “தலைவனே! முற்றத்திலுள்ள அரும்பு முதிர்ந்த புன்க மரத்தின் மலர்கள் உதிர்ந்து பரந்த வெள்ளிய மணற்பரப்பில்,