பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


வேலனால் அமைக்கப்பட்ட வெறியாட்டெடுக்கும் இடந் தோறும் செந்நெல்லினது வெள்ளிய பொறி சிதறினாற் போன்ற தோற்றத்தைத் தரும். மணல் மேடுகள் பொருந்திய எம்முடைய ஊரிலுள்ள அகன்ற நீர்த்துறையில் நுண்ணிய மூட்டு வாயை உடைய முன்கையைப் பிடித்துத் தெய்வ மகளிரைச் சுட்டிக் கூறிய உறுதிமொழி எம்மைத் துன் புறுத்திற்று” என்றாள் தோழி.

12. உள்ளத்தின் இன்பம் தச்சன் செய்த சிறு மா வையம், ஊர்ந்து இன்புறாஅர் ஆயினும், கையின் ஈர்த்து இன்புறுஉம் இளையோர் போல, உற்று இன்புறேனம் ஆயினும், நற்றேர்ப் பொய்கை ஊரன் கேண்மை செய்து இன்புற்றனெம் செறிந்தன வளையே.

- தும்பிசேர்கீரன் குறு 61 “தச்சனால் செய்யப்பெற்ற சிறு குதிரை பூட்டிய கை வண்டியை ஏறிச் செலுத்துகின்ற இன்பம் அடையாராயினும் கையால் இழுத்து இன்பம் அடையும் சிறுவரைப்போல, தலைவனாக மெய்யுற்று இன்பம் அடையாவிடினும், நல்ல தேரையும் பொய்கையும் உடைய ஊருக்கு உரியவனான எம் தலைவனின் நட்பை எம் உள்ளத்தே நினைத்து இன்பம் அடைந்தோம். அதனால் வளைகள் கழலாமல் இறுகி அமைந் தன” எனத் தலைவன் விட்ட தூதர்களிடம் தோழி கூறினாள்.

13. காதலன் வரவை ஒதினார் எவர்?

நீ கண்டனையோ? கண்டார்க் கேட்டனையோ? ஒன்று தெளிய நசையினம்; மொழிமோ! வெண் கோட்டு யானை சோணை படியும் பொன் மலி பாடலி பெறீஇயர் - யார்வாய்க் கேட்டனை, காதலர் வரவே.

- படுமரத்து மோசிகீரனார் குறு 75 “தண்லவனின் வரவைக் கூறிய பாணனே, அவரை நீ கண்ணால் கண்டாயோ தலைவனைக் கண்டவர்கள் சொல்லக்