தொகை - வகை - உரை : த. கோவேந்தன்
57
கேட்டு அறிந்தாயோ? அங்ஙனம் பிறர்பால் கேட்டனை ஆயின் யாரிடத்துக் கேட்டறிந்தாய். அதை அறிந்து கொள்ள விருப்பம் உடையோம் ஆதலின் உண்மையை உரைப்பாயாக! அப்படி உரைத்தால் அதற்குப் பரிசாக வெள்ளிய கொம்பு களை உடைய யானைகள் துளையமிட்டு விளையாடும் சோணை ஆற்றின் கரையில் அமைந்துள்ள பொன் நிறைந்தி ருக்கும் பாடலிபுத்திரத்தை நீ பெறுவாயாக!” என்று தலைவி மகிழ்ந்துரைத்தாள்.
114. சிற்றுார் வந்து காணல் வேண்டும்
கூந்தல் ஆம்பல் முழு நெறி அடைச்சிப், பெரும் புனல் வந்த இருந் துறை விரும்பி, யாம் அஃது அயர்கம் சேறும் தான் அஃது அஞ்சுவது உடையள் ஆயின், வெம் போர் நுகம் படக் கடக்கும் பல் வேல் எழினி முனை ஆன் பெரு நிரை போலக், கிளையொடு காக்க, தன் கொழுநன் மார்பே.
- ஒளவையார் குறு 80 “எம் கூந்தலின்கண் ஆம்பலினது புறவிதழ் ஒடித்த முழுப் பூவைச் செருகிற, வெள்ளம் வரப்பெற்ற பெரிய நீர்த்துறையை விரும்பிய தலைவனும் யானும் புனல் விளை யாடுதலுக்குச் செல்வோம். அங்ஙனம் யாம் தலைவனுடன் விளையாடுதலுக்கு அத் தலைவி அஞ்சுவாளானால், கொடிய போரில் பகைவரை வஞ்சியாது எதிர் நின்று கொல்லும் பல வேற் படையை உடைய எழினி, போர்முனையில் உள்ள பசுக்களின் பெரிய கூட்டத்தைக் காத்து மீட்பது போலத் தன் கணவனது மார்பைத் தனக்குப் பாங்கானவர்களோடு பாது காத்துக் கொள்வாளாக!” என்று பரத்தை தலைவனின் உறவினர் கேட்கும்படி கிளத்தினாள்.
115. அன்பில்லாதவன்!
யாரினும் இனியன்; பேர் அன்பினனே - உள்ளூர்க் குரீஇத் துள்ளு நடைச் சேவல் சூல் முதிர் பேடைக்கு ஈனில் இழைஇயர்,