தொகை - வகை - உரை : த. கோவேந்தன் &
கற்றிருந்தாலும் சைவ சமயத்தவராகவே வாழ்ந்ததாலும் என் கல்வி விட்டு விட்டுத் தொடர்ந்ததால் எட்டாம் வகுப்பு படிக்கையில் தான் சங்க நூல்கள் அறிமுகமாயின. காரணம் ‘செந்தமிழ்ச் செல்வி’ ‘தமிழ்ப் பொழில்’ வீட்டுக்கு வந்தன. பாடநூல்களிலும் சங்கப்பாடல்கள் பாடப்பகுதியில் வந்திருந்தன.இவற்றுக்கும் மேலாய் வேலுர் குமு. அண்ணல்தங்கோவின் மாணவர் படையின் தலைவனாய் இருந்ததால் 40-50-களில் நடந்த தைப் பொங்கலின் ஒரு வார விழாவில் அக் காலத்தில் சிறந்தோங்கி யிருந்த பல பெருபுலமைச் சான்றோர்களின் சொற்பொழிவுகளாலும் அவர் களுக்குத் தொண்டு செய்தபோது பெற்ற செவிச் செல்வமும் செழுந்தமிழ் நூற்படிப்பும் என்னை மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வில் புகுத்தியது. பாவேந்தர் தொடர்பும் அறிவுரையும் சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், சமய இலக்கியங்கள் சிற்றிலக்கியங்கள் பாரதி - பாரதிதாசன் சசு.சோமசுந்தர பாரதி, வெள்ளை வராணனார், வேங்கட ராமையா, மயிலை வேங்கடசாமி, ந.மு. வேங்கடசாமி நாட்டார். கரந்தைக் கவியரசு, பெரும்புலவர் வேணு கோபால நாய்கர் - பாலசுந்தர நாய்க்கர், உரைவேந்தர் அவ்வை சு. துரை சாமி பிள்ளை, மு.வ. போன்ற பலரின் தொடர்பும் என்னைப் பிற இலக்கியங்களிலிருந்து சங்க இலக்கியத்தில் மேலும் மேலும் தோயச் செய்தன. 1957-இல் தோழர் தங்கப்பாவின் நட்பு சங்க இலக்கிய ஐந்தருவி யில் திளைத்தின்புறச் செய்தது.
சென்னை வாழ்க்கை என்னைப் பிறர்க்கெழுதிப் பலர் பேரும் புகழும் பட்டமும் பெற முன்னிறுத்தியது. என் வாழ்க்கைக்குரிய வருவாய் அதில் வந்தது. அப்பொழுது சங்க ஆய்வுக் களத்தில் மருதம் பற்றி ஆய்வு செய்தேன். அதற்கு முன்பே அகப்பொருள் நூல்கள் எவையும் ஏனோ குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் - பாகுபாடு நூலுக்கு நூல் வேறுபட்டிருப்பதை அறிந்து தெரிந்திருந்த எனக்கு அகப் பொருள் பாடல்கள் அனைத்தையும் இப் பாகுபாட்டில் பிரிக்க வேண்டும் என்ற உந்தாற்றல் என் மனப் பண்ணையில் உயிர்த்தெழுந்தது.
தொகை நூல்களில் முதன்முதல் தொகுக்கப்பட்டது குறுந்தொகையும் அடுத்து நற்றிணையும் ஆகும். எனவே இரு நூல்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாடல்கள் காவனத்தில் உலாவும் பல்வகை அஞ்சிறைத்தும்பிகளாக முறையின்றி ஊடுருவியுள்ளன. அரிமா நோக்காக நற்றிணையில் ஒவ்வொரு பத்தாம் பாட்டும் பல மருதத்திணையாகிறது. பின்னர் தொகுக்கப்பட்ட ஐங்குறுநூறு மருதம் - நெய்தல் - குறிஞ்சி