பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

63


125. எம்மைக் கடல் வருந்துக!

கணைக் கோட்டு வாளைக் கமஞ் சூல் மட நாகு துணர்த் தேக்கொக்கின் தீம் பழம் கதுTஉம் தொன்று முதிர் வேளிர் குன்றுர்க் குணாது தண் பெரும் பெளவம் அணங்குக - தோழி! மனையோள் மடமையின் புலக்கும் அனையேம் மகிழ்நற்கு யாம் ஆயினம் எனினே!

- மாங்குடிமருதன் குறு 164 “தோழியே! தலைவி தன் அறியாமையால் புலம்புதற்குக் காரணமாகிய தன்மையுடையோமாகத் தலைவனுக்கு யாம் ஆயினோமாயின் திரண்ட கொம்புகனை உடைய வாளை மீனினது நிறைந்த கருப்பத்தையுடைய பெண்மீன் ஆனது கொத்தாகக் காய்த்துள்ள தேமாவினது முதிர்ந்த பழத்தைக் கவ்வுதற்கு இடமாகிய மிகப் பழைய வேளிர்க்குரிய குன்றுாருக்குக் கிழக்கில் உள்ளதாகிய குளிர்ந்த பெரிய கடல் எம்மை வருத்துவதாக” என்று காதல் பரத்தை தலைவிக்கு ண்ேடியவர்கள் கேட்கும்படி தோழியிடம் கூறினாள்.

126. எம் உயிர் நீங்குக! சுரம் செல் யானைக் கல்உறு கோட்டின் தெற்றென இlஅயரோ - ஐய! மற்று யாம் நும்மொடு நக்க வால் வெள் எயிறே. பாணர் பசுமீன் சொரிந்த மண்டை போல எமக்கும் பெரும் புலவு ஆகி, நும்மும் பெறேஎம், இlஇயர் எம் உயிரே.

- வெள்ளிவீதியார் குறு 169 ‘ஐயனே! யாம் தும்மோடு சிரித்து மகிழ்ந்த தூய வெள்ளிய பற்கள் பாலை நிலத்தில் செல்லும் யானையினது மலையைக் குத்திய கொம்பைப் போல விரைவாக முறிவன வாக! எமது உயிர் பாணர் தாம் பிடித்த பச்சை மீனைப் பெய்த மண்டையைப் போல உமக்கும் பெரிய வெறுப்பைத் தருவதாகி உம்மையும் யாம் பெறாமல் கெட்டு அழிவதாக” எனத் தலைவி, தலைவனிடம் கூறினாள்.