பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


உவர்ப்பு சுவையினதாய் உள்ளது என்று கூறுகின்றீர். நுமது அன்பின் இயல்பு அத்தகையது.” என்று ஊடல் கொண்ட தலைவி உடன்படும்படி தோழியிடம் கூறத் தோழி விடை உரைத்தாள்.

131. நோம் என் நெஞ்சமே! நோம், என் நெஞ்சே நோம் என் நெஞ்சே! புன் புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சிக் கட்கு இன் புது மலர் முள் பயந்தாஅங்கு, இனிய செய்த நம் காதலர் இன்னா செய்தல் நோம், என் நேஞ்சே!

- அள்ளுர் நன்முல்லை குறு 202 “தோழி, என் நெஞ்சம் மிக வருந்தும். முல்லை நிலத்தில் நெருங்கி முளைத்த சிறிய இலைகளை உடைய நெருஞ்சி யினது கண்ணுக்கு இனிமை தரும் புதிய மலர், பின்னர் இன்னாமையைத் தரும் முள்ளைத் தந்தாற் போல, முன்பு இனியவற்றைச் செய்த நம் தலைவர் இப் பொழுது இன்னா தனவற்றைச் செய்து ஒழுகுதலால் உன் நெஞ்சு நோகின்றது.” என்று பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனின் தூதாக வந்த தோழியிடம் தலைவி புகன்றான்.

132. பரிவு நீங்கி விட்டது மலை இடையிட்ட நாட்டரும் அல்லர்; மரந்தலை தோன்றா ஊரரும் அல்லர்; கண்ணின் காண நண்ணுவழி இருந்தும், கடவுள் நண்ணிய பாலோர் போல, ஒரீஇனன் ஒழுகும் என்னைக்குப் பரியலென்மன் யான், பண்டு ஒரு காலே.

- நெடும்பல்லியத்தன் குறு 203 “தோழியே தலைவர் மலைகள் இடையிட்டுக் கிடக்கும் சேயதாகிய நாட்டினரும் அல்லர். தன்னிடத்துள்ள மரங் களின் உச்சிகள் மறைத்தலால் கண்ணிற்கு எட்டாத காடு இட்ை யிட்ட தூரத்தில் உள்ள ஊரினரும் அல்லர். நம் கண்ணாலே காணும்படியாக விரைவில் வருவதற்குரிய