68
அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்
பயிரை உடைய வயலினது வரப்பாகிய அணையிலே படுக்க வைத்த, ஒளிவீசும் வளைபளை உடைய பெண்கள் வண்டல் விளை யாடும் தொண்டி என்னும் பட்டினத்தைப் போன்ற உனது பெண்மை நலத்தைத் தந்துவிட்டு நினது சூளைப் பெற்றுக் கொண்டு செல்வாயாக!” என்று தோழி உரைத்தாள்.
135. அழகை இழந்தாள் வாரல் எம் சேரி, தாரல் நின் தாரே, அலராகின்றால் - பெருமl- காவிரிப் பலர் ஆடு பெருந்துறை மருதொடு பிணித்த ஏந்து கோட்டு யானைச் சேந்தன் தந்தை, அரியல்அம் புகவின் அம் கோட்டு வேட்டை நிரைய ஒள் வாள் இளையர் பெருமகன், அழிசி ஆர்க்காடு அன்ன இவள் பழிதீர்மாண்நலம் தொலைவன கண்டே.
- பரணர் குறு 258 “பெரும, பலரும் நீராடுகின்ற காவிரியின் பெரிய நீர்த் துறையினிடத்தே வளர்ந்த மருத மரத்தில் கட்டிய மேலு யர்ந்த கொம்புகளைக் கொண்ட யானைகளை உடைய சேந்தனிடைய தந்தையும், கள்ளாகிய உணவையும் அழகிய விலங்குத் திரள்களை வேட்டையாடும் தொழிலையும், பகைவருக்கு நரக வாழ்வைப் போன்ற துன்பத்தைத் தரும் ஒள்ளிய வாளையும் உடைய இளைய வீரர்களின் தலைவனு மாகிய அழிசி என்பவனின் ஆர்க்காடு என்னும் நகரத்தைப் போன்ற இவளது குற்றமற்ற மாட்சிமையுடைய அழகு அழிதலைக் கண்டபின், எமது சேரிக்கண் வருதலை ஒழி வாயாக நின் மாலையைத் தருதலையும் ஒழிக. பழிமொழி உண்டாகிறது” என்றாள் பரத்தையிற் பிரிந்த தலைவனை நோக்கி,
136. ஒரு நாள் நட்பு கொண்டேன்
அருவி அன்ன பரு உறை சிதறி யாறு நிறை பகரும் நாடனைத் தேறி, உற்றது.மன்னும் ஒரு நாள் மற்று அது