பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

71


யினோம். அவரும் நம்மிடத்திற்கு வந்து துன்பத்தை நீக்கினார் அல்லர். இந் நிலையில் நான் அடைந்த காமநோய், பிறர் செலுத்தி விடாமலும் போரை இடையில் சென்று தடுத்து நிறுத்துவார் இல்லாததாலும் குப்பைப் கோழியின் தனி மையை உடைய சண்டையைப் போலத் தானே அழியும்படி அழிந்தாலன்றி இதனை நீக்குவார் இல்லையே” என்றாள் தோழியிடம் தலைவி.

140. இன்னாதன செய்யினும் மறவோம்

கைவினை மாக்கள் தம் செய்வினை முடிமார், சுரும்பு உண மலர்ந்த வாசம் கீழ்ப்பட, நீடிய வரம்பின் வாடிய விடினும், ‘கொடியோர் நிலம் பெயர்ந்து உறைவேம் என்னாது, பெயர்ந்தும் கடிந்த செறுவில் பூக்கும் நின் ஊர் நெய்தல் அனையேம் - பெரும! நீ எமக்கு இன்னாதன பல செய்யினும், நின் இன்று அமைதல் வல்லாமாறே.

- உறையூர்ச் சல்லியன் குமாரன் குறு 309 “தலைவ, நீ எமக்கு இன்னாதனவாகிய பல செயல்களைச் செய்தாலும், நின்னையன்றிப் பொருந்தி வாழ்வதற்கு வன்மை அற்றவராயினோம். தொழில் செய்யும் உழவர் தமது செய் தொழில் முடிக்கும் பொருட்டு வண்டு உண்ணும்படி மலர்ந்த மலரின் மணம் வீசும் நெய்தற் பூவை நீண்ட வரப்பிலே வாடும்படி விட்டாலும் மீண்டும் தம்மை நீக்கியோரின் வயலினிடத்தே மலர்கின்ற நின் ஊரில் உள்ள பூவிற்கு ஒத்த தன்மை உடையேம் ஆயினோம்” என்றாள் தோழி தலை வனை நோக்கி.

141. மாலையும் தனிமையும் உண்டே!

நலத்தகைப் புலைத்தி பசை தோய்த்து எடுத்துத் தலைப் புடைப் போக்கித் தண் கயத்து இட்ட நீரின் பிரியாப் பரூஉத் திரி கடுக்கும் பேர் இலைப் பகன்றைப் பொதி அவிழ் வான் பூ இன் கடுங் கள்ளின் மணம் இல கமழும்