பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


புன்கண் மாலையும், புலம்பும், இன்றுகொல் - தோழி - அவர் சென்ற நாட்டே?

- கழார்க்கீரன் எயிற்றியன் குறு 330 “தோழி, நன்மையையும் அழகையும் உடைய வண்ணாத்தி கஞ்சியிலே தோய்த்து எடுத்து முதல் தப்பலை தப்பிவிட்டு குளிர்ந்த நீர்நிலையிலே போட்ட, நீரில் பிரியாத பருத்த ஆடையின் முருக்கை ஒக்கும் பெரிய இலைய்ை உடைய பகன்றையினது கூம்பு மலர்ந்த வெள்ளிய மலர், இனிய கடுமையாகிய கள்ளைப் போல் நறுநாற்றம் இல்லாதனவாகி நாறுகின்ற துன்பத்தைத் தரும் மாலைக் காலமும் தனிமை யும் அத் தலைவர் நம்மைப் பிரிந்து சென்ற நாட்டிலே இல்லையோ?” என்றாள் தலைவி தோழியிடம் கூறினாள்.

142. வீட்டில் கொண்டு விடுக நீர் நீடு ஆடின் கண்ணும் சிவக்கும்; ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்; தணந்தனை ஆயின், எம் இல் உய்த்துக் கொடுமோ - அம் தண் பொய்கை எந்தை எம் ஊர்க் கடும் பாம்பு வழங்கும் தெருவில் நடுங்கும் அஞர் எவ்வம் களைந்த எம்மே?

- கயத்துர கிழார் குறு 354 “நீரிலேயே நெடுநேரம் விளையாடினால் கண்களும் செந் நிறத்தை அடையும்; பன்முறை உண்டோரது வாயிடத்தே தேனும் புளிப்புடையதாகும். ஆதலின் நீ எம்மைப் பிரிய விரும்பினை ஆயின், அழகிய குளிர்ந்த பொய்கையை உடைய எம் தந்தையினது ஊரின் கண்ணே, நஞ்சின் கடுமையை உடைய பாம்புகள் ஒடும் தெருவில், நீ முன்பு நடுங்குதற்குரிய மிக்க துன்பத்தை நீக்கிய எம்மை, எம்முடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுவாயாக!” என்று தோழி தலைவனிடம் இயம்பினாள்.

143. மகனைத் தந்தை தழுவினான் கண்டிசின் - பாண பண்பு உடைத்து அம்ம: மாலை விரிந்த பக் வெண் நிலவின்