பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

73


குறுங் காற் கட்டில் நறும் பூஞ் சேக்கை, பள்ளி யானையின் உயிர்த்தனன் நசைஇப், புதல்வன் தழிஇயினன் விறலவன்; புதல்வன் தாய் அவன் புறம் கவைஇயினனே.

& - பேயன் குறு 359 “பாணனே! வெற்றியை உடைய தலைவன் மாலைக் காலத்திலே, விரிந்த இளைய வெண்ணிலா ஒளியில், குறிய கால் களை உடைய கட்டிலினிடத்தே உள்ள நறிய மலர் பரப்பிய படுக்கையில் படுத்தலை உடைய யானையைப் போலப் பெருமூச்சு விட்டானாகி விருப்பத்தினால் தன் மகனைத் தழுவினான். அம் மகனின் தாயாகிய தலைவி அத் தலைவனது புறத்தைத் தழுவினாள். இதனைப் பார்ப்பாயாக. இச் செயல் அழகுடையது” என்று தோழி பாணனுக்குக் கூறினாள்.

144. என் வயப்படுத்துவேன் அரில் பவர்ப் பிரம்பின் வளிப்புற நீர்நாய் வாளை நாள் இரை பெறுஉம் ஊரன் பொன்கோல் அவிர் தொடித் தற்கெழு தகுவி எற்புறங்கூறும் என்ப; தெற்றென வணங்கு இறைப்பணைத் தோள் எல் வளை மகளிர் துணங்கை நாளும் வந்தன; அவ் வரைக் கண் பொர, மற்று அதன்கண் அவர் மனம் கொளற்கு இவரும் மள்ளர் போரே.

- ஒளவையார் குறு 364 “பிணக்கை உடைய கொடிப் பிரம்புகளைப் போன்ற கோடுகள் பொருந்திய புறத்தை உடைய நீர் நாயானது வாளை மீனாகிய உணவைப் பெறுகின்ற ஊருக்குத் தலை வனுடைய பொன்னாலாகிய திரட்சியும் விளக்கமும் உடைய வளை அணிந்த, தனக்குப் பொருந்திய தகுதியை உடைய பரத்தை என்னைப் புறங்கூறினாள் என்று கூறுவர். அவள் கூறுவது உண்மையா அன்றா என்பது விளங்கும்படி, வளைந்த சந்தை உடைய மூங்கிலைப் போன்ற தோள்களில் ஒளி உடைய வளையை அணிந்த மகளிர் துணங்கைக் கூத்தாடும் நாள்களும் வந்தன. அக் காலத்தில் ஒருவர் கண்