பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


உடைய, நெடிய பலவாகிய கூந்தலும் தோளும் குறிய வளை களையும் உடைய பரத்தையரது பெண்மை நலத்தை நுகர்ந்து துறந்து ஈண்டு வருவாய் ஆயின் நீ அவர் மாட்டு செய்த சூள் மிக நன்றாயிருந்தது.” என்று பரத்தையிடம் சென்று மீண்ட தலைவனிடம் தோழி வாயில் மறுத்துக் கூறினாள்.

149. பழி மிகுந்தது மயங்கு மலர்க் கோதை குழைய மகிழ்நன் முயங்கிய நாள் தவச் சிலவே அலரே கூகைக்கோழி வாகைப் பறந்தலைப் பசும் பூண் பாண்டியன் வினை வடல அதிகன் களிறொடு பட்ட ஞான்றை, ஒளிறு வாட் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே

- பரணர் குறுந் 393 “தலைவ! விராவிய பல மலர்கள் உடைய நின் மாலை குழையும்படி அணைந்த நாள்கள் மிகச் சிலவாகும். பழி மொழியோ, கோட்டானாகிய கோழியை உடைய வாகை என்னும் இடத்துள்ள போர்களத்தில், பசிய பூணை அணிந்த பாண்டியனது ஏவலிலே வல்ல அதிகன் தனது யானை யோடு பட்ட காலத்தில் விளங்குகின்ற வாட்படையை உடைய கொங்கர்களுடைய வெற்றியால் உண்டாகிய ஆர வாரத்தினும் மிகப் பெரிதாகயுள்ளது.” என்று தலைவிக்குக் கூறுவது போல் தலைவனுக்கு உணர்த்தினாள்.

150. விடுதலும் தொடுதலும்

ஊர் உண் கேணி உண்துறைத் தொக்க

பாசி அற்றே பசலை காதலர்

தொடுவுழித் தொடுவுழி நீங்கி,

விடுவழி விடுவுழிப் பரத்தலானே. - பரணர் குறுந் 399

தோழி! பசலையானது தலைவர் நம்மைத் தீண்டுந் தோறும் நம் உடலை விட்டகன்று, பிரியுந்தோறும் பரவுத லால், ஊரினரால் உண்ணப்படும் நீரை உடைய (ஊருணி - குளம்) உண்ணுந்துறையின் இடத்தே கூடிய பாசியைப் போன்றது.