151. வாழ்க அவள்!
ஐய! குறுமகட் கண்டிகும்; வைகி, மகிழ்நன் மார்பில் துஞ்சி, அவிழ் இணர்த் தேம் பாய் மராஅம் கமழும் கூந்தல் துளங்குஇயல் அசைவர, கலிங்கம் துயல்வர, செறிதொடி தெளிர்ப்ப வீசி, மறுகில், பூப் போல் உண்கண் பெயர்ப்ப நோக்கிச், சென்றனள் வாழிய, மடந்தை, - நுண் பல் சுணங்கு அணிவுற்ற விளங்கு பூணள்; மார்புறு முயக்கிடை ளுெமிர்ந்த சோர் குழை, பழம் பிணி வைகிய தோள் இணைக் குழைந்த கோதை, கொடி முயங்கலளே.
- ஒரம்போகியார் நற் 20 “ஐய! ஒர் இளைய மகளைக் கண்டோம். அவள் மருத நிலத் தலைவனாகிய உன்னிடம் தங்கி, உன் மார்பில் துயின்று எழுந்து வண்டுகள் பாய்ந்த மராமரத்தின் அவிழ்ந்த பூங் கொத்துகள் மணக்கும் கூந்தல் அசையும் இயல்போடு அசைந்துவர, ஆடை அசைய, செறிந்த வளையல்கள் ஒலிக்கக் கைவீசி, மலர் போன்ற மையுண்ட கண்களால் உலாவிப் பார்த்து நேற்றுத் தெருவில் சென்றனள். அம் மடந்தை வாழ்க! அவள் நுண்ணிய பலவாகிய தேமல் அழகு செய்யப் பெற்றவள். விளங்கிய அணிகளை உடையவள். உன் மார்பு உள்ள முயக்கத்தினிடையே நெரிந்த காதணியையும், பழைய வருத்தம் தங்கிய இரு தோள்களையும், துவண்ட மாலையை யுமுடைய அவள், கொடிபோல் உன் முயக்கமில்லாது