தொகை - வகை - உரை : த. கோவேந்தன்
79
பெரும்பாண் காவல் பூண்டென, ஒரு சார், திருந்துஇழை மகளிர் விரிச்சி நிற்ப, வெறி உற விரிந்த அறுவை மெல் அணைப் புனிறு நாறு செவிலியோடு புதல்வன் துஞ்ச, ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈரணிப் பசு நெய் கூர்த்த மென்மை யாக்கைச் சீர்கெழு மடந்தை ஈர்- இம்ை பொருந்த, நள்ளென் கங்குல், கள்வன் போல, அகன் துறை ஊரனும் வந்தனன் - சிறந்தோன் பெயரன் பிறந்தமாறே.
- - கோண்மா நெடுங்கோட்டனார் நற் 40 சிறப்பு மிக்க தலைவன் இல்லத்தில் நீண்ட நாவை யுடைய ஒளிமிக்க மணி ஒலிக்கும். ஒலிக்கும் ஒலைகளால் வேயப்பட்ட பந்தர் மணல் பரப்பில் இருக்கும். பெரிய பாணன் காவல் பூண்டது போல ஒருபக்கம் இருப்பான். திருந்திய அணி கலன்கள் அணிந்த பெண்கள் நல்லோரை எதிர்பார்த்து நிற்பர். இவ்வாறாய இல்லத்தில் நறுமணம் உண்டாக விரித்திருந்த நூலாடையுடைய மெல்லிய படுக்கை யில் அண்மையிற் பிறந்த புதல்வன் செவிலியருகில் உங்குகி றான். சிறப்பு மிக்க தலைவி வெண் சிறுகடுகு அணிந்த நெய்யாட்டு நிறைவேறிய அணிமைக் காலத்தில் பசிய நெய் விளங்கும் மெல்லிய உடம்போடு இரு இமைகளும் பொருந்த துங்கிக் கிடந்தாள். இருள் செறிந்த இரவிலே அகன்ற நீர்த் துறையையுடைய ஊரனாகிய தலைவனும் கள்வன் போலப் புகுந்தாள். சிறந்த தன் தந்தையின் பெயரைச் சூட்டிக் கொள்ளப் போகும் மகன் பிறந்தான் என்ற காரணத்தால் தலைவன் தன் இல்லம் போந்தான்” என்று தலைவிக்கு வேண்டியவர் கேட்கப் பரத்தை நகையாடினாள்.
154. அறியாமையால் இழந்தேன்
அறியாமையின், அன்னை அஞ்சி, குழையன் கோதையன் குறும் பைந் தொடியன் விழவு அயர் துணங்கை தழுஉகம் செல்ல, நெடு நிமிர் தெருவில் கைபுகு கொடு மிடை