பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


“சிறிய வெண்ணிற நாரையே, சிறிய வெண்ணிற நாரையே, நீர்த்துறையிலே வெளுத்த வெள்ளாடையின் மாசற்ற மடி போன்ற வெள்ளை நிறமான சிறகுகளையுடைய சிறிய வெள்ளிய நாரையே; நீ எம் ஊரில் வந்து எமது நீர் உண்ணும் துறைகளில் துழாவிக் கெளிற்று மீன்களை உண்கிறாய். பிறகு அவர் ஊருக்குத் திரும்பப் போகிறாய். அங்கேயுள்ள இனிய நீர் இங்கே பரவிக் கிடக்கும். வயல்களை யுடைய நல்ல ஊரையுடைய என் அன்பருக்கு நீ எனது அணிகள் கழன்ற நோயைச் செப்பாமல் இருக்கிறாய். நீ அவ்வாறாய அன்புடைய பறவையா? அல்லது பெரிய மறதியுடைய பறவையா? எனக்கு விளங்கவில்லையே” என்று தலைவி தன் வேட்கையைத் தலைவனைக் கண்டு கூறுமாறு நாரையிடம் கூறினாள்.

157. அவளின்றி மருந்து வேறு இல்லை

“மன்ற எருமை மலர்தலைக் காரான் இன்தீம் பாற்பயம் கொண்மார், கன்று விட்டு, ஊர்க் குறுமாக்கள் மேற்கொண்டு கழியும் பெரும் புலர்விடியலின் விரும்பிப் போத்தந்து, தழையும் தாரும் தந்தனன்.இவன் என, இழை அணி ஆயமொடு தகுநாண் இடைஇ, தைஇத் திங்கள் தண்கயம் படியும் பெருந்தோட் குறுமகள் அல்லது, மருந்து பிறிது இல்லை, யான் உற்ற நோய்க்கே.

- பூதன்தேவனார் நற் 80 “தொழுவத்திலுள்ள அகன்ற தலையையுடைய எருமைக் காரானின் மிகவும் இனிமையுள்ள பாலை நிரம்பப் பெறும் பொருட்டுக் கன்றுகளைத் தொழுவத்தில் கட்டிவிட்டு, எருமைகளை மட்டும் ஒட்டிக் கொண்டு, மேய்க்கும் ஊரிலுள் இளம் சிறுவர்கள் அந்த எருமைகளின் மேலே ஏறிக் கொண்டு வீட்டை விட்டுப் புறப்படும் நன்றாகப் புலர்ந்த விடியற் காலத்தில், விரும்பி வந்து உடுக்கத் தழையும் சூடிக்கொள்ள மாலையும் கொடுத்தான் இவன்” என்று கலன்கள் அணிந்த ஆயத்தோடு, தகுந்த நாணம் தன்னைத் தடைசெய்ய என்னை