தொகை - வகை - உரை : த. கோவேந்தன்
83
யடையத் தை மாதம் குளிர்ந்த குளத்தில் நீராடும் நோன்பு செய்யும் பெரிய தோளையுடைய இந்தி இளமகளைத் தவிர யான் கொண்ட நோய்க்கு மருந்து பிறிது இல்லை” என்று தோழி, தன்னுடன் தலைவியை ஊடல் தீர்த்து இணைத்து வைக்காததால் தலைவன் நெஞ்சோடு புலம்பினான்.
158. ஊஞ்சல் ஆடியிருந்தால் ஆடு இயல் விழவின் அழுங்கல் மூதூர், உடையோர் பான்மையின் பெருங் கை துவா, வறன் இல் புலைத்தி எல்லித் தோய்த்த புகாப்புகர் கொண்ட புன் பூங் கலிங்கமொடு வாடா மாலை துயல்வர, ஒடி, பெருங் கயிறு நாலும் இரும் பணம் பிணையல் பூங் கண் ஆயம் ஊக்க, ஊங்காள், அழுதனள் பெயரும் அம் சில் ஒதி, நல்கூர் பெண்டின், சில் வளைக் குறுமகள் ஊசல் உறு தொழில் பூசல் கூட்டா நயன் இல் மாக்களொடு கெழீஇ பயன் இன்று அம்ப, இவ் வேந்துடை அவையே!
- - அஞ்சில் அஞ்சியார் நற் 90 “கூத்தாட்டம் நடக்கும் இயல்பான மகிழ் விழாவுள்ள ஒலியுடைய பழைய ஊரில், செல்வர் மிகுதியாகவுள்ளமையால் கையுழைப்பும் வறட்சியும் இல்லாத வண்ணாத்தி இரவில் தோய்த்து உணவாக்கிய கஞ்சியிலிட்டுப் புலர்த்திய மெல்லிய அழகிய ஆடையையும் பொன்னரி மாலையையும் மார்பில் அணிந்து அவை அசைய நடந்து வந்தாள் ஒரு பெண். கரிய பனை நாரினாலே திரித்த பெரிய கயிற்றால் பிணித்துத் தொங்கவிட்ட ஊசலில் ஒடிச் சென்று ஏறினாள். பூப் போன்ற கண்களையுடைய தன் ஆயம் ஆட்ட ஆடாளாய் அழுது நீங்கினாள். அவள் அழகிய சிலவாகிய கூந்தலை யுடையவள்; பெண்மையில், குறைவானவள். சில வளையல்களைப் பூண்ட அவள் இளைய பரத்தையாவாள். இவ் வேந்துடைய அவை ஊசல் ஆட்டமான தொழிலை வருத்தத்தோடு செய்யாது. நன்மையில்லாத மாக்களோடு உறவு கொண்டு பயன் இல்லை.