பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


எனவே பாண போய்வா” என்று தலைவிக்கு உரைப்பாள் போன்று தோழி பாணனுக்குக் கூறி வாயில் மறுத்தாள்.

159. தலைவன் நடுநடுங்கினான்!

உள்ளுதொறும் நகுவேன் - தோழி - வள் உகிர் மாரிக் கொக்கின் கூரலகு அன்ன குண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன் தேம் கமழ் ஐம்பால் பற்றி, என் வயின் வான் கோல் எல் வலை வெளவிய பூசல், சிளவிய முகத்து, சினவாது சென்று, நின் மனையோட்கு உரைப்பல் என்றலின், முனை ஊர்ப் பல் ஆ நெடு நிரை வில்லின் ஒய்யும் தேர் வண் மலையன் முந்தை, பேர் இசைப் புலம் புரி வயிரியர் நலம் புரி முழவின் மண் ஆர் கண்ணின் அதிரும், நன்னர் ஆளன் நடுங்கு அஞர் நிலையே. - பரணர் நற் 100 “தோழி! அதை நினைக்குந்தோறும் நான் நகுவேன். பெரிய நகத்தையுடைய மழைக்காலக் கொக்கின் கூம்புநிலை போல ஆழமான குளத்திலுள்ள ஆம்பல் மலரும் தண்ணிய துறையையுடைய ஊரன், பூமணம் கமழும் என் கூந்தலைப் பற்றி இழுத்து மடியில் உட்கார வைத்து என்னிடமுள்ள சிறந்த வேலைப்பாடு அமைந்த ஒளியுள்ள என் கை வளையல் களைக் கழற்றி விளையாடிய பூசலை இப்போது சினங் கொண்ட முகத்தோடு யான் சென்று, “சினங்காட்டாமல் உன் மனைவிக்கு உரைப்பேன்” என்று சொன்னேன். அது கேட்ட வுடன், நன்மையை மேற் கொள்பவராகிய அவர் நடுங்கினார். அந் நடுக்கம், பகைவரது ஊரின் போர் முனையிலே பல நெடிய ஆன் நிரைகளை வில்லின் திறமையாலே கைப்பற்றி அவற்றை ஒட்டிக் கொண்டுவந்து இரவலர்களுக்குக் கொடையாக அளிக்கும் மலையமான் திருமுடிக்காரி என்பவன் அரியனை யிலே கொலு வீற்றிருக்கும்போது, வேற்றுநாட்டுக் கூத்தர் வந்து பரிசில் பெற விரும்பி முழக்கும் மத்தளத்தின் மண் வைத்த பக்கம் அதிர்வதுபோல இருந்தது” என்று தலைவனின் பரத்தை தலைவியும் பிறரும் கேட்கத் தன் விறலியிடம் கூறினாள்.