பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


161. அன்னை சீற்றம் அடைவாள்

நகை நன்கு உடையன் - பாணl - நும் பெருமகன்; ‘மிளை வலி சிதையக் களிறு பல பரப்பி, அரண் பல கடந்த முரண் கொள் தானை வழுதி, வாழிய பல எனத் தொழுது, ஈண்டு மன் எயிலுடையோர் போல, அஃது யாம் என்னலும் பரியலோ இலம் எனத் தண் நடைக் கலி மா கடைஇ வந்து, எம் சேரித் தாரும் கண்ணியும் காட்டி, ஒருமைய நெஞ்சம் கொண்டமை விடுமோ? அஞ்ச, கண்ணுடைச் சிறு கோல் பற்றிக் கதம் பெரிது உயைடள், யாய் அழுங்கலோ இலளே.

- கடுவன் இளமள்ளனார் நற் 150 “பாணனே! உன் தலைவன் எல்லாராலும் நகுதற்குரியன். காவல் காக்கும் அரணின் வலிமை சிதையும்படி பல யானை களைப் பரப்பி அழித்து அரண் பலவற்றை வென்ற வலிமை மிக்க சேனையை உடையவன் வழுதி என்பான். அவன் பலகாலம் வாழ்க எனத் தொழுது ஒன்று சேர்ந்திருக்கும் நிலையான மதிலுடைய குறுநில மன்னர் போல எம்மிடம் வந்தான் தலைவன். அதற்கு யாம் சிறிதும் இரங்குதல் செய்யோம் எனக் கூறினோம். அதன் பிறகு, மெல்லிய நடையுடைய குதிரையைச் செலுத்தி எம் சேரி வந்து தலை வன் தாரும் கண்ணியும் காட்டி ஒரு தன்மையான என் நெஞ்சத்தைக் கவர்ந்து கொண்டான். அதனால் இனித் தலைவனை விடுதல் அமையுமோ? அமையாது. எம் தாய் நீ அஞ்சும்படி கணுக்களையுடைய சிறிய மூங்கிற் கோலைப் பிடித்துக் கொண்டு சினம் பெரிதுடையவளாய் இருப்பாள். அவள் எதற்கும் இரங்குகிறவள் இல்லை.” எனப் பரத்தை தலைவனை நெருங்கிப் பாணன் இருப்பைக் கண்டு கூறினாள்.

162. தலைவரைக் காத்திட எழுவோம்

மடக் கண், தகரக் கூந்தல், பணைத் தோள், வார்ந்த வால் எயிற்று சேர்ந்து செறி குறங்கின்,