தொகை - வகை - உரை : த. கோவேந்தன்
87
பிணையல் அம் தழை தைஇத் துணையிலள் விழவுக் களம்பொலிய வந்து நின்றனளே; எழுமினோ எழுமின், எம் கொழுநற்கு ஆக்கம், ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளுர்ப், பலர்உடன் கழித்த ஒள் வாள் மலையனது ஒரு வேற்கு ஒடியாங்கு, நம் பன்மையது எவனோ, இவள் வன்மை தலைப்படினே?
- ஆசிரியர் ? நற் 170 செவ்வரிக் கண் மயிர்ச்சாந்து பூசிய கூந்தல்; மூங்கில் போன்ற தோள்; நிரைந்த வெள்ளை நிறமான பற்கள்; திரண்டு நெருங்கிய தொடைகள்; இவற்றையுடைவள் ஒப்பற்ற விறலி, பின்னிய அழகிய தழையுடையை உடுத்தி விழாக் களம் பொலிய வந்து நின்றனள். “விரைந்து எழுங்கள், நம் கணவன் மார்களைக் காப்போம். விறலியின் வலிமை கூடி விடு மானால் நமது பன்மை என்ன செய்ய முடியும்? பெரிய புகழையுடைய முள்ளுர்ப் போர்க்களத்தில் ஆரியர்கள் நெருங்கிப் பல எண்ணிக்கையில் இருந்தவர்கள், ஒள்ளிய வாள்படையை யுடைய ம்லையமான் திருமுடிக் காரியின் ஒரு வேற்படைக்கு ஆற்றாது தோற்றோடினர். அதுபோல நம் கூட்டம் என்ன செய்ய முடியும்? அழிந்து பயனில்லாது போகும்’- என்றனர் தோழியர்கள்.
163. என்னோடு நீங்கும் இவர்கள் பகை பழனப் பாகல் முயிறு மூசு குடம்பை கழனி நாரை உரைத்தலின், செந்நெல் விரவு வெள்ளரிசியின் தாஅம் ஊரன் பலர்ப் பெறல் நசைஇ, நம்இல் வாரலனே; மாயோள், நலத்தை நம்பி விடல் ஒல்லாளே, அன்னியும் பெரியன்; அவனினும் விழுமிய இரு பெரு வேந்தர், பொரு களத்து ஒழித்த புன்னை விழுமம் போல,
என்னொடு கழியும் - இவ் இருவரது இகலே.
- ஆசிரியர் ? நற் 180