பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


“வயலருகில் இருக்கும் பலா மர இலைகளைக் கூடாக்கிச் செந்நிற எறும்புகள் முட்டையிட்டு நெருங்கி மொய்த் திருக்கும். அவ் வயலுக்கு வந்த நாரை இரையுண்ண அக் கூட்டைத் தேய்த்தலாலே அம் முயிறுகளும் அவற்றின் முட்டைகளும் உதிரும். அது, சிவந்த நெல் கலந்த வெண்மை யான அரிசி போலப் பரந்து கிடக்கும். அவ்வாறாகிய ஊரன் பரத்தையர் பலரைப் பெற்று நுகர விரும்பியதால் நம் இல்லத்திற்கு வரவில்லை. வந்தாலும் மாமை நிறத்தையுடைய தலைவி, அவன் நலத்தை விரும்பிப் புலத்தலை விட்டு விட உடன்பட மாட்டாள். அன்னியும் பெரிய திதியனும் விழுமிய இருபெரு வேந்தர்கள். அவரது போர்க்களத்தில் அழிந்த புன்னை மரம் இருவர் போரையும் ஒழித்தது. அதுபோல யான் ஒழிந்தால் இவ் இருவரது இகலும் ஒழியும்” எனப் பரத்தையிடமிருந்து வந்த தலைவன் தலைவியை நாடத் தோழி தலைவியின் சினத்தை ஆற்றாமை யால் இவ்வாறுரைத்தாள்.

164. பாணரைப் பற்றியும் பகர்வாயாக

கண்ணி கட்டிய கதிரல் அன்ன ஒண் குரல் நொச்சித் தெரியல் குடி, யாறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில், ‘சாறு என நுவலும் முது வாய்க் குயவ! ஈதும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ - ஆம்பல் அமன்ற தீம் பெரும் பழனத்துப் பொய்கை ஊர்க்குப் போவோய் ஆகிக், ‘கை கவர் நரம்பின் பனுவற் பாணன் செய்த அல்லல் பல்குவ - வை எயிற்று, ஐது அகல் அல்குல் மகளிர் - இவன் பொய் பொதி கொடுஞ் சொல் ஒம்புமின் எனவே

- கூடலூர்ப் பல்கண்ணனார் நற் 200 “அரும்பு கட்டிய கதிர்போன்ற ஒள்ளிய பூங் கொத்தை யுடையது நொச்சி. அந்த நொச்சியால் ஆக்கிய மாலையைத் தரித்து, ஆறு கிடந்தது போன்ற அகன்ற நெடிய தெருவில், திருவிழா என்று எடுத்துச் சொல்லிச் செல்லும் முதிய