பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

91


கணைக்கால், ஆம்பல் அமிழ்து,நாறு தண் போது, குணக்குத் தோன்று வெள்ளியின், இருள் கெட விரியும் கயற்கணம் கலித்த பொய்கை ஊர! முனிவு இல் பரத்தையை என் துறந்து அருளாய், நனி புலம்பு அலைத்த எல்லை நீங்க, புது வறம்கூர்த்த செறுவில் தண்ணென மலி புனல் பரத்தந் தாஅங்கு, இனிதே தெய்ய, நிற் காணுங்காலே.

- ஆலங்குடி வங்கனார் நற் 230 “பெண் யானையின் நெருங்கிய காதுகள் போலப் பசிய இலைகள்; குளத்தில் கூட்டமான கொக்குகள் போலக் கூம்பிய மொட்டுகள்; இவற்றிற்கேற்ற திரண்டதண்டு; இவற்றை உடைய ஆம்பலின் அமிழ்து கமழும் குளிர்ந்த அலரும் பருவத்து அரும்புகள் கீழ்த்திசையில் தோன்றும் வெள்ளி போல இருள் கெடும்படி மலரும், கயல் மீன் கூட்டம் மிக்க பொய்கையையுடைய ஊரனே! வெறுப்பு இல்லாத பரத்தையை, எம்மைக் கைவிட்டு அருள்செய்வாய், மிக்க தனிமைத் துன்பம் வருத்திய எல்லை நீங்க, புதிய வறட்சி மிக்க வயலில் குளிரும்படி மிக்க நீர் பரவி நிறைந் தாற் போல உன்னைக் காணும் போதெல்லாம் எமக்கு இனிமை ஏற்படுகிறது. அதுவே போதும்” என்று பரத்தை யுடன் தொடர்பு கொண்ட தலைவன் தலைவியின் அன்பு பெற வேண்டுகையில் தோழி மறுத்துரைத்தாள்.

168. நீர் யார்?

நகுகம் வாராய்-ப்ாண பகுவாய் அரி பெய் கிண்கிணி ஆர்ப்ப, தெருவில் தேர் நடை பயிற்றும் தேமொழிப் புதல்வன் பூ நாறு செவ்வாய் சிதைத்த சாந்தமொடு காமர் நெஞ்சம் துரப்ப, யாம் தன் முயங்கல் விருப்பொடு குறுகினேமாகப், பிறை வனப்பு உற்ற மாசு அறு திருதுதல் நாறு இருங் கதுப்பின் எம் காதலி வேறு உணர்ந்து,