பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

95


தாமரைக்கு இறைஞ்சும் தண் துறை ஊரன் - சிறு வளை விலை எனப் பெருந் தேர் பண்ணி, எம் முன் கடை நிறீஇச் சென்றிசினோனே! நீயும், தேரொடு வந்து பேர்தல் செல்லாது, நெய் வார்ந்தன்ன துய் அடங்கு நரம்பின் இரும் பாண் ஒக்கல் தலைவன்! பெரும் புண் ஏனர் தழும்பன் ஊனுர் ஆங்கண், பிச்சை சூழ் பெருங் களிறு போல, எம் அட்டில் ஒலை தொட்டனை நின்மே. - பரணர் நற் 309 “நெய் வடிந்தாற் போன்ற பிசிர் அடங்கிய நரம்பு பூட்டிய யாழையுடைய பெரிய சுற்றத்தைக் கொண்ட பாணர் தலைவனே, ஒளியுள்ள வளையல்கள் அணிந்த அரசி சினந் தால், வேலைக்காரிகள் தலைகுனிந்து வணங்குவார்கள். அதுபோல விரைவான காற்று அடிப்பதினாலே ஆம்பல் குவிந்து தாமரையிடத்திலே வந்து சாய்ந்து வணங்கி நிற்கும். அவ்வாறாய குளிர்ந்த துறைக்குத் தலைவன் ஒருவன் பெரிய தேரை அழகு செய்து உன் காதலியின் சிறிய வளையலின் விலை (பெண்ணுக்கு கையுறை) என்று எம் இல்லத்தின் வாயிலின் முன்னே நிறுத்திவிட்டுச் சென்று விட்டான். நீயும் அவ்வாறு தேரொடு வந்து பெண் பேசிப் போக முடியாமல் இங்கே நிற்கிறாய். போரிலே மார்பில் பெரும் புண்ணை ஏற்று அழகு பெற்ற தழும்பன்’ என்பவனுக்கு உரிமையானது ஊணுார் என்பது. அந்த ஊரை யானை வாழும் மலை சூழ்ந்துள்ளது. அதிலுள்ள ஒரு யானை வீட்டின் ஒரு புறத்தில் ஒதுங்கி நிற்பது போல எம் சமையல் அறையின் பனை ஓலையால் வேயப்பட்ட கூரையின் ஒலையைத் தொட்டுக் கொண்டு ஒதுங்கி நிற்கின்றாய். நீ அப்படியே நிற்பாயாக. வேறு என்ன செய்யப் போகிறாய்” என்று ஒரு பரத்தையை மற்றொரு பரத்தையை நாடும் தலைவனைக் கண்டு ஆத்திரமுடன் கூறினாள் விறலி.

173. மிகைப்படுத்துவதில் வல்லவன்

விளக்கின் அன்ன சுடர் விடு தாமரை, களிற்றுச் செவி அன்ன பாசடை தயங்க,