பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


அதன் பிறகு உயர்ந்த கிளைகளையும் அடர்ந்த இருளையு முடைய மருத மரத்தின் இனிய நிழலில் வந்து தங்கியிருக்கும். அவ்வாறாய் புதிய வருவாயையுடைய ஊரனே, சிறந்த அணி கலன்களை அணிந்த உன் பரத்தையரை எம் மனைக்கே அழைத்து வந்து நீ தழுவி வாழ்ந்தாலும் அவர்களின் புன்மை யான மனத்தில் உண்மையான அன்பு விளங்குதல் அரிதாகும். அவர்களும் பெண்களையும் ஆண்களையும் பெற்று அறம் நிறைந்தவர்களாய்க் கற்பு உடையவர்களாய் எம்மைப்போல் எம் தகுதி யுடையவர்களாய் ஆவது அதைவிட அரிதாகும். இவற்றை நீ அறிந்தாயில்லை” என்று தலைமகனை தோழி வாயின் மறுத்தாள்.

176. உன்னை வெறுக்கவும் இல்லை புல்லேன், மகிழ்ந புலத்தலும் இல்லேன் - கல்லா யானைக் கடுந்தேர்ச் செழியன் படை மாண் பெருங் குளம் மடைநீர் விட்டென, கால்அணைந்து எதிரிய கணைக் கோட்டு வாளை அள்ளல்.அம் கழனி உள்வாய் ஒடி, - பகடு சேறு உதைத்த புள்ளி வெண் புறத்துச், செஞ் சால் உழவர் கோல் புடை மதரிப், பைங் காற் செறுவின் அணைமுதல் பிறழும் வாணன் சிறுகுடி அன்ன, என் கோள் நேர் எல் வளை நெகிழ்த்த நூம்மே - நக்கீரர் நற் 340 “மகிழ்ந, சிறுகுடி என்னும் ஊர் போன்ற அழகிய வேலைப் பாடமைந்த ஒளிபொருந்திய என் வளையல்களை நெகிழ்த்த உன்னைப் புல்லேன்; புலத்தலும் இல்லேன். ஏனென்றால் கேள்: பாகன் குறிப்பது தவிரப் பிற கல்லாத யானைகளையும் விரைவாச் செல்லும் தேரையுமுடையவன் செழியன். அவன் பெயராலே செய்தனர் சிறந்த ஒரு குளம். அதன் மடை வழியே நீரை விட்டனர். அந் நீர் வெளியே சென்றது. குளத்திலிருந்த திரண்ட மருப்பையுடைய வாளை மீனும் அந் நீரின் கால்வாயை அடைந்து எதிர் சென்றது. அதன் பின்னர் சேற்றை யுடைய வயலின் உள்ளே புகுந்தது. அங்கே உழுகின்ற எருமைக் கடாவின் சேறுபட்ட காலில்