பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அட்வகேட் வழக்கறிஞர், வழக்குரைஞர்
அட்வகேட் ஜெனரல் அரசுத் தலைமை வழக்கறிஞர்
அட்வைசர் அறிவுரையாளர்
அட்வான்ஸ் முன் பணம், முன்னேற்றம்
அட்வான்டேஜ் நன்மை, மேன்மை
அட்வென்ச்சர் துணிவுச் செயல்
அட்ஹாக் தனி நிமித்தம், குறிப்பிட்டதற்கென, குறிப்பிட்ட ஒன்றுக்கான
அட்ஜார்ன் ஒத்தி வை
அட்ஜஸ்ட் சரிப்படுத்து
அட்ஹாக் ரூல்ஸ் தற்காலிக விதிகள்
அட்ஜஸ்ட் சரிக்கட்டு
அடமென்ட் பிடிவாதம்
அடாப்ட் தழுவு, பொருத்தமாக்கு
அடாப்டர் ஏற்பி, இயைபி, பொருத்தி
அடல்ட் வயது வந்த, கட்டிளமை
அடல்ட்ரேஷன் கலப்படம்
அடாப்ஷன் மகவேற்பு, ஏற்பிசைவு
அடிக்ட் பழக்க அடிமை, தீய பழக்கத்திற்கு அடிமை
அடிஷனல் சேர்ப்பு, கூடுதல்