பக்கம்:அபிதா.pdf/107

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அபிதா O 101


சிந்திய கெளரவத்தைத் திரட்டி, நிமிர்ந்த முதுகில் சுமந்துகொண்டு, கொல்லைப்புறம் செல்கிறேன். விழி தெறிக்கிறது. தலை சுற்றுகிறது. காலடியில் ஏதோ தடுக்-

“ஐயோ!”

அபிதா அலறினாள்.

ஒரு கை என்னைப் பிடித்துக் கொண்டது, உதறினேன்.

ஆனால் இந்தச் சமயம் குருக்கள் என்னை விடுவதா யில்லை, என் கூச்சம், கோபம் அவருக்குச் சட்டையில்லை. என்னை அழுத்திப் பிடித்துக்கொண்டு, முதுகில் சீயக்காய்க் குழைவைப் பூசித் தேய்க்கிறார்.

முதுகுத் தேய்ப்போடுதான் எண்ணெய்ச் சடங்கு பூர்த்தி. சுறீல்-

ஸன்னமானதோர் வெம்மை, பிடரியில் கண்டு, வேர் பிரிந்து, ஆணி வேர் நடு முதுகில் இறங்குகிறது.

மண்டையும் நினைவும் அமிழ்ந்து கிடக்கும் அரை மயக்கத்தில், விழிகளில் எண்ணெய்க் கரிப்பின் முழுக் குருடில், சூடு என்று தவிர, சட்டென அடையாளம், உணர்வில் உடனே கூடவில்லை.

சுட்டிய விரல் நுனியின் ஈர்ப்பில் புருவ நடுவைத் துருவும் வேதனைபோல் உடல் பூரா, காலிலிருந்து தலை நோக்கி ஒரு காந்தம் ஊடுருவிக் கடுத்தது.

மொண்டுமொண்டு, தலையிலும் தோளிலும் மாறி மாறிக் கொட்டிக் கொள்கிறேன். ஆனால் பிடரிமேல் நூல் பிடித்து விழுந்து கொண்டிருக்கும் இந்தக் கிண்டி நீரின் நெருப்பு, தந்தியறவில்லை. நேரே முதுகுத் தண்டிலிருந்து நரம்பு தானே கண்டு மீட்டும் இந்த இன்பமும் துன்பமும் ஒரே பங்கில் கலந்த இந்தத் தவிப்புக்கு ஈடு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/107&oldid=1130555" இலிருந்து மீள்விக்கப்பட்டது