பக்கம்:அபிதா.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அபிதா 11


தான் தெரிஞ்சுக்கறேனே!” என நேருக்கு நேரே சவால் சிலர்.

“இந்தா நீ ரெண்டு மாதம் வெச்சுக்கோ. அப்புறம் கூடப்பிறந்த தோஷம் ஒரு மாசம் என்கிட்டே இருக்கட்டும். அப்புறம் கடைக்குட்டி நம்மைவிடப் பச்சையா வாழறான். அவன் ஆறு மாதம் போடட்டுமே! அப்புறம் வருஷம் முடியறதுக்குள் மறு சுத்துக்கு நம்மிடம் வந்துடப் போறாள்! சும்மாவா போடப் போறான்? அவனுக்கு வாய்ச்சவள் லேசுப்பட்டவளா? டேப்பா! விழி நரம்பிலிருந்து நார் உறிச்சுத்தானே தன் குழந்தை குட்டிகளுக்குச் சட்டைகவுணிலிருந்து தெறிச்சுப் போன பொத்தானைத் தைப்பாள்!

உடன் பிறந்தான்மார்கள் இப்படி இட்ட பிச்சையும். விட்ட ஏலமுமாய் பிழைப்பு ஆனபின்னர், என்னதான் சதைத் தடிப்பானாலும் ஒருநாள் இல்லாவிட்டால் ஒரு நாள் எந்தச் சொல்- எந்தத் தோளிடிப்பு- எந்த ஏளனப் புன்னகை எப்படித் தைத்ததோ? ஏற்கெனவே விளிம்பில் நடுங்கிக் கொண்டிருக்கும் கனத்தை இப்புறமோ அப்புறமோ தள்ளிவிட ‘பூ’ என்று வாயால் ஒரு ஊதலே போதும்.

நாலுபேர் நாலு விதமாகச் சொல்லிக்கொண்டனர்.

பழசு நினைவில் படமெடுக்கையில் காரணமற்ற கோபத்தில் காரணமிழப்பேன்.

“என் தாயை நீ ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை!” - சீறுவேன்.

“இதுக்கே உங்களுக்கு இப்படிப் பொத்துக்கறதே! என் வயிற்றில் பிறக்கப் போகும் பிள்ளைக்கும் அவன் தாயாரை நீங்கள் பழித்தால் அப்படித்தானே இருக்கும்!”

ஆச்சரியத்துடன் எழுந்து உட்கார்ந்தேன். என் கண்களில் தோன்றிய வினாவுக்குப் பதிலாய் :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/17&oldid=1125612" இலிருந்து மீள்விக்கப்பட்டது