பக்கம்:அபிதா.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அபிதா O 17


அங்கங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாகக் கண்ணைக் கரித்தன.

“இல்லை, நீங்கள் சொல்ற தினுசு வேடிக்கையாயிருக்கு.”

அவள் பக்கமாய்ச் சட்டென்று குனிந்தேன்.

“இதல்லாம் எதற்குப் பீடிகை? சமாதானம் பண்ணிக் கொள்கிறாய் என்று அர்த்தமா?”

“ஆமாம்! சமாதானம்! வெற்றி!” உதட்டைப் பிதுக்கினாள், “என்ன அர்த்தமற்ற வார்த்தைகள்!”

“என்ன, ஞானோதயமோ?”

அவளுக்குக் கோபம் வரவில்லை. எங்கோ நினைப்பாய் என் பாதங்களை வருடினாள்.“அலுப்புன்னு வெச்சுக்கோங்கோளேன்! உங்கள் வெற்றியைவிட என் தோல்விதானே உங்களுக்கு முக்கியம்! அப்படியேதானிருந்துட்டுப் போகட்டுமே!”

நான் அசதியுடன் தலை சாய்ந்தேன். எனக்குத் திருப்தியில்லை. தன் தோல்வியை அவள்தானே என்னிடம் தாம்பூலத் தட்டில் தந்தது. அதுவே அவள் வெற்றியாய்த் திரிந்து என் தொண்டையடியில் கசந்தது. இப்படித்தணிந்து, அவளை அவள் இயற்கைக்கு விரோதமாய்ப் பார்க்கவும் பிடிக்கவில்லை. ஒருவருக்கொருவர் ஒருவரிடமிருந்து ஒருவர் என்னதான் வேண்டுகிறோம்? வாழ்க்கையில் இதற்குள்ளேயே இவ்வளவு தெவிட்டல். பாக்கி நாள் கழிப்பதெப்படி?

ஒரு பெரும் இடி தூரத்தில் பிறந்து உருண்டு கொண்டே நெருங்கி வந்து தலை மேலேயே விழுவதுபோல் நொறுங்கியது. யாக குண்டத்திலிருந்து எழுந்த அக்னி தேவன் கையில் ஏந்திய வெள்ளிப் பாயஸக்கிண்ணம் போல, அறை ஒருவினாடி மின்னலில் பளீரிட்டு, அறையில் முன்னிலும் காரிருள் கவிந்து சூழ்ந்து கொண்டது. பலத்த

அ- 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/23&oldid=1125646" இலிருந்து மீள்விக்கப்பட்டது