பக்கம்:அபிதா.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அபிதா O 21


ஆனால் சில நாட்களாகவே மாடிப்படியேறினால் மார்பு படபடக்கிறது. சற்று வேகவாக நடந்தால் மூச்சு இறைக்கிறது. டாக்டர் 'ஸ்டெத்'தை வைத்து சோதித்து விட்டுச் சிரிக்கிறார்.

“அதெல்லாம் ஒன்றுமில்லை Heart beat quite perfect. ஜீரணக் கோளாறாயிருக்கலாம். அல்லது மனதில் ஏதாவது ideapressure இருந்தாலும் இந்த மாதிரியெலாம் நேர்வதுண்டு. இதை எங்கள் பாஷையில் psychosomatic என்போம். பாட்டியம்மா பாஷையில் உடம்பு கால்; மனசு முக்கால்’ என்று அதற்கு அர்த்தம். பாட்டியம்மா பாஷைன்னா சூள் கொட்டாதேங்கோ ஸார்! அதுதான் எழுத்தையும் மீறி, வழிவழியா பாட்டி பேத்திக்குச் சொல்லி, பேத்தி பாட்டியாகி அவள் பேத்திக்குச் சொல்லி, வழக்கில் வந்த உயிர்ப்பாஷை. நம்ம பாஷையைவிட அதில்தான் உண்மை அதிகம்- இப்படி ஆரம்பித்துப் பேச்சை எங்கோ கொண்டு போவார். அடித்துக்கேட்டால், “பேச்சும் ஒரு ட்ரீட்மென்ட், எல்லாக் கோளாறுக்கும் ஒரே கட்டு மாத்திரை” என்பார்.

ஆனால் கூடவே ஒன்று. சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள மனம் வருவதில்லை. குரோதங்களைப் புதைக்க இடம் வயிறு. இன்பங்களுக்கு இதயம் என்று என் துணிபு. இரண்டுமே ஊமைக் காயங்கள்தான். ஸ்புடத்தினின்று நெஞ்சுக்கு சாவகாசமாய் வரவழைத்துக் கொண்டு குமுறுகையில், அல்ல, கரைகையில், அப்போது கடைந்து உடல் பூரா பரவுவது நஞ்சோ அமுதமோ, அவைதரும் சுவை அவரவர்க்குத் தனி. இதை மனைவியே ஆனாலும் பகிர்ந்து கொள்வது எப்படி? அதுவும் சாவித்ரியுடனா?

“உங்களைப்போல் நீங்களே இருங்கள். நான் இருக்க வேண்டாம்.” மனசில் ஒண்ணும் வெச்சுக்கத் தெரியாதவள்; வெகுளி'ன்னு கட்டின அசட்டுப்பட்டம் அப்படியே இருந்துட்டுப் போகட்டும். யாரும் என் நெஞ்சில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/27&oldid=1126436" இலிருந்து மீள்விக்கப்பட்டது