பக்கம்:அபிதா.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அபிதா O 31


மட்டும் அறிந்து இது போன்ற எண்ணற்ற ஆத்ம ஆஹூதிகளின் தேனடைதானே அவரே!

பித்தத்தின் உச்சம்
தேன்குடித்த நரி
புன்னகையாலேயே அழித்து
புன்னகையாலேயே ஆக்கி
புன்னகையாலேயே ஆகி
புன்னகை மன்னன்
ஆண்டவனும் ஒரு ஆணி மாண்டவ்யனே!

3

ழியில். கழனிக்கட்டில், ஒரு ஏற்றம் இறைக்கின்றது. கிணற்று விளிம்புக்குமேல் ஒரு தலைப்பா மட்டும் தெரிகின்றது. மேலே ஏற்றக் கோலின் இரு நுனியிலும் இருவர் ஏறி இறங்கி ஒருவரையொருவர் ஓயாமல் தேடி ஒருவரையொருவர் அடையாமல் மாறிமாறி வருகின்றனர். கீழே சால் கவிழ்ந்ததும் கிணற்றையொட்டிய கல்முகவாய் வழி ஜலம் ஜலஜல சலசல அலைகள் துள்ளிக் குதித்துத் திரிந்து கொண்டு, நுரைத்துக்கொண்டு, சுழித்துக் கொண்டு, தெறித்துக்கொண்டு கேளிக்கையாடிக்கொண்டு, பாய்ந்து சரிந்து பரவி சிற்றருவிகள் பிரிந்து பச்சைப்பசேல் பயிர்க்கால்களில் குறுகுறுவென உருவி ஓடுகின்றன.

தத்தளிக்கும் தராசுபோல் மேலே இருவர் மிதிப்பில் ஏற்றக்கோல் வானைக் குறி பழகும் அம்புபோல் நிலை கொள்ளாது ஏறி இறங்குகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/37&oldid=1126489" இலிருந்து மீள்விக்கப்பட்டது