பக்கம்:அபிதா.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அபிதா O 33


லும், மறுகணமே தறிதெறித்துப் புத்தியையும் தன்னுடன் இழுத்துக்கொண்டு, சென்ற போன வருடங்களில் கல், முள், மேடு பள்ளங்களில் விழுந்தடித்து ஒடுகிறது. நெற்றியில் வேர்வை கொப்புளிக்கிறது. அசதியில் வண்டியில் தலை சாய்கிறேன்.

சக்கு, உனக்கும் எனக்கும் இடையே பத்து வயதிருக்குமா? சக்கு. உனக்கு நினைவிருக்கா? ஒரு சமயம் பக்கத்தூருக்கு உன் அப்பாவோடு கந்தசஷ்டி சூரசம்மாரத்துக்குப் போயிருந்தோமே! அதாண்டி, சுவாமியைக் கையும் காலையும் முறித்து, வில்லையும் அம்பையும் கொடுத்து அலங்காரம் பண்ண உன் அப்பாவை அமைத்திருந்தார்களே! கூட்டம் முழி பிதுங்கித்து. வாணம், சாமி 'ஸைடி' விருந்து கயிறு மேலே சீறி வந்ததும் சூரன் தலையை மாத்தறது உனக்குத் தெரியல்லேன்னு அழுதையே! அப்போ கூட்டத்தில் உன்னைத் தோள் மேலே தூக்கிண்டு நின்னேனே, உனக்கு நினைவிருக்கா? அப்போ நீ பாவாடையும் சொக்காயுந்தான் அணிஞ்சிருந்தே. சின்னப் பொண்ணு எட்டுவயசோ பத்துவயசோ. என் தலைமயிரைக் கொத்தாப் பிடிச்சுண்டு என் தோள்மேலே உட்கார்ந்துண்டு வேடிக்கை பார்த்தையே, நான் கூட மயிரைப் பிடிச்சு உலுக்காதேடின்னு கத்தினேனே உனக்கு நினைவிருக்கா?

அம்பி! உனக்கு நினைவிருக்கா? அன்னி ஒருநாள் நவராத்திரி போது 'நகுமோமு’ நன்னா பாடினேன்னு அம்மா உன்னிடம் என்னை அந்தப் பாட்டைக் கத்துக்கச் சொன்னாளே! நீயும் கத்துக் கொடுத்தியே! அம்பி, என்னதான் சுட்டுப் போட்டாலும் உன் பாட்டு எனக்கு வருமா? இருந்தாலும் எனக்குத் தாளம் தப்பிப் போச்சுன்னு என் தொடையிலே 'பட்'டுனு ஒண்ணு வெச்சையே! நான் அழுதுட்டேன். அப்போ நான் பெரியவளாகல்லே. பாவாடை சொக்காயில் சின்னப் பொண்ணுதான். நீ கூட அப்புறம் 'அழாதேடி அழாதேடி'ன்னு சமாதானம்

அ- 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/39&oldid=1126493" இலிருந்து மீள்விக்கப்பட்டது