பக்கம்:அபிதா.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56 0 லா. ச. ராமாமிருதம்


“ராப்பூரா தேடியலைஞ்சுட்டு- எந்தக் காரியம் எப்படியானாலும் காலை பூஜை நடந்தாகணுமே! சுவாமி தலையில் தண்ணியைக் கொட்டியாகணுமே!- அப்பா குடம் ஜலத்துடன் மலையேறி வந்தால், லிங்கத்தைக் கட்டிண்டு அம்மா செத்துக் கிடக்கறா."

இழுத்துவிடுத்த நாண் செவியோரம் 'பூம்பூம்’, ‘பூம் பூம்'-

கண்ணுக்குமீறிய ராக்ஷஸங்கள் எவையெவையோ எங்கெங்கோ முறிந்து,

இருள் தூலங்கள் என்மேல் சாய்கையில் எங்கிருந்தோ ஒருகுரல்:

“......... ...சுவாமிக்குக் கும்பாபிஷேகம் பண்ணும்படி ஆயிடுத்து. குருக்கள் வீட்டைத் தூத்தாதவாள் கிடையாது. மத்த நாள் கோவிலுக்கு மலையேறி வரவாள் பக்தி தட்டுக்கெட்டுப் போயிடறது, ஒண்ணுமில்லாட்டாலும், ஊரே ‘கொல்'லுனு ஆயிடுத்து. ‘செத்தும் கெடுத்தாள் பாவின்னு அப்பா சபிப்பார்."

திடீரென அவள் முழுக்க என் பக்கம் திரும்பினாள். அவள் முகம் வேதனையில் முறிந்தது.

“நீங்கள் சொல்லுங்கோ மாமா, அம்மா பேரை நீங்கள் சொல்றேள். என் அம்மாவைப் பார்த்திருக்கேள். என் அம்மா என்ன அப்படிக் கெட்டவளா?”

கைகளைப் பிசைந்துகொண்டு, காற்றிலாடும் புஷ்பப் புதர்போல், குன்றி நீ இப்படி நிற்கையில் நீ செத்தாய் என்று உன் வாயாலேயே நீ சொல்லும் விந்தை என்ன? நீ கெட்டவளா என்று என்னையே கேட்கும் அர்த்தம் என்ன? என்னிடம் என்ன சத்தியத்தைக் கேட்டு வாங்குகிறாய், எனக்கு ஒண்ணுமே புரியல்லியேடி!

இரு கைகளாலும் நெற்றிப்பொட்டைப் பற்றிக்கொள்கிறேன். கன்னங்களில் கண்ணீர் சுட்டது. பற்றியெரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/62&oldid=1126938" இலிருந்து மீள்விக்கப்பட்டது