பக்கம்:அபிதா.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அபிதா O 77

மாடடோம் என்று அவளுக்குத் தெரியும். அந்த மகிழ்ச்சியை அவள் தெரிவிக்கும் முறை இப்படித்தான் போலும்!

“நீங்கள் எல்லாம் எவ்வளவு பெரிய மனுஷாள்! ஏதோ பழைய வாசனையை மாமா மாதிரி ஞாபகம் வெச்சுண்டு யார் இந்த மாதிரி வருவா?”

கேட்டுக்கொண்டே ஏதோ காரியமாக மாமி கூடத்துக்கு வருகிறாள். என்னைப் பார்த்ததும் அப்போத்தான் பார்த்ததுபோல் அடக்கம் பண்ணிக் கொள்கிறாள்.

வாய் அமுதம் பொழிகின்றது.

கண் கணக்கெடுக்கிறது.

சுவர்மேல் சூர்ய கிரணம் சிரிக்கிறது.

குருக்கள், நைவேத்திய மூட்டையைத் தோளில் மாட்டிக் கொண்டு கிளம்பி விட்டார்.

அபிதா வீட்டில் இல்லை.

நானும் வெளியே போகிறேன். கால் சென்ற இடம்.

குருக்கள் மாமி முகஸ்துதிக்குச் சொன்னாலும், கடைந்த உணமையைத்தான் சொல்கிறாள். வாசனைகளில்தான் உயிர் வாழ்கிறோம்.

உண்மை, தெய்வம், விடுதலை என்கிற பெயரில் ஏதோ மாயா சத்யத்தைத் தேடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம்புவதும் வாழ்வதும் என்னவோ வாசனைகள், பிம்பங்கள், நினைவுகள், கனவுகள் என்னும் சத்ய மாயையில்தான் இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடித்தாலும் இருப்பதை மறுப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது? நிழல்களில் பரிதவித்து நிழல்களில் கனிந்து கனிந்து நிழல்களில் தெளிந்த, நிழல்தான் மனம், உணர்வு, புத்தி, ஞானம், தரிசனம், உண்மை, தெய்வம், முக்தி என்று இந்த அனுமான நிலைக்கு என்னென்ன பேர்கள் உண்டோ அவை அத்தனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/83&oldid=1127339" இலிருந்து மீள்விக்கப்பட்டது