பக்கம்:அபிதா.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அபிதா O 83


தலையிட்டும் நான் சாதித்தது என்ன என்று கேலி பண்ணுகிறான். .

என்னைச் சுற்றி மரங்கள் அனைத்தும்கூட அவன் கக்ஷிபோல், அவன் சொல்லுக்கு சாக்ஷியாய் அவன் குற்றச்சாட்டுக்கு உடந்தையாய்ச் சலசலக்கின்றன. என்னை நெருக்குவதுபோல் எப்போது எப்படி திடீரென இவ்வளவு கிட்ட வந்தன? இவன் என்மேல் கைவைத்தால் நான் தாங்குவேனா? எனக்கு லேசாய் மூச்சுத் திணறுகிறது. சற்று வேகமாகவே நடக்கிறேன். அவன் எக்காளம் என்னைத் துரத்துகிறது நடையும் ஒட்டமுமாய் விரைகிறேன். மாந்தோப்பைத் தாண்டியதும்- அப்பா!மரங்களின் சிறையினின்று விடுபட்டாற்போல் ஒரு பெருமூச்சு என்னின்று எழுகின்றது!

மீண்டும் பரந்தவெளி.

அதோ கரடிமலை.

தோப்புகளினிடையே அங்கங்கே வீடுகளின் கூரைகள், ஒலைமுடையில்கள், ஒடுகள், ஒன்றிரண்டு மாடிகள் கூட. ஒரு தென்னையின் அடிமரத்துடன் பிணைத்து அறைந்த தபால்பெட்டியின் சிவப்பு, வெகு தூரத்தில் கண்ணில் பட்டுப் பட்டு மறையும் சாலைக் கோட்டின்மேல் ஒரு பஸ் இங்கிருந்து பார்க்க எறும்புபோல் ஊர்ந்தது. நான் இருந்த இடத்திலிருந்து இரண்டு மைலுக்குப் பஞ்சமில்லை. இன்னொரு மூலையில், கண்ணுக்கெட்டிய தூரத்துப் புள்ளியாய் ரயில்வே ஸ்டேஷனின் சிவப்புக் கூரை.

வயல்களில், தொடுவானத்தில் ஏதேதோ புள்ளிகள் ஒன்று சேர்கின்றன. பிரிகின்றன. திரும்பவும் கூடுகின்றன.

கண்ணுக்குப் பத்தடி உயர வானத்தில் ஒரு புள்ளி புறப்பட்டது; வண்டு. அதன் ரீங்காரத்தின் சுழலிலேயே மாட்டிக்கொண்டு, அது கிர்ரிட்டுக் கொண்டே வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/89&oldid=1130514" இலிருந்து மீள்விக்கப்பட்டது