பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

அபிராமி அந்தாதி

பரம் - பாரம்; நீயே பரம்பொருள் என்று எனலும் ஆம். தமியேனும் என்ற உம்மை இழிவு சிறப்பு. அன்று: பண்டறி சுட்டு. வாங்கிய கையான், செற்ற கையான் எனத் தனித்தனியே கூட்டுக.

88

சிறக்கும் கமலத் திருவேநின்
சேவடி சென்னிவைக்கத்
துறக்கம் தரும்நின் துணைவரும்
நீயும் துரியமற்ற
உறக்கம் தரவந் துடம்போ
டுயிர்உற வற்றறிவு
மறக்கும் பொழுதென்முன் னேவரல்
வேண்டும் வருந்தியுமே.

(உரை) சிறப்புற்ற நூற்றிதழ்த் தாமரையில் வீற்றிருக்கும் தேவி, நின் சிவந்த திருவடியைத் தன் சென்னியிலே ஒருவன் வைக்க அவனுக்கு மோட்ச பதவியைத் தரும் நின்னுடைய பதியாகிய பரமேசுவரரும் நீயும் உடம்போடு உயிருக்கு உள்ள நட்பு அற்று அறிவு அழிந்து எல்லாம் மறக்கின்ற மரண காலத்தில், துரியம் கடந்த நிலையில் வரும் சிவானந்த அனுபவமாகிய தூக்கத்தைத் தரும் பொருட்டு எழுந்தருளி வந்து, அங்ஙனம் வருதல் வருத்தம் தருவதாயினும் அவ் வருத்தத்தை ஏற்று அடியேனுக்கு முன்னே வந்து காட்சி கொடுத்தருளுதல் வேண்டும்.

சென்னி வைக்கவும் உறக்கம் தரவும் என்று கூட்டிப் பொருள் செய்தலும் பொருந்தும்.

கமலத்திரு: 5, 20, 58, 80, 82. தரும் என்பது நின் என்பதனோடு மாத்திரம். முடிந்தது. துரியமற்ற உறக்கமாவது துரியாதீதமாகிய துவாதசாந்த வெளியில் உண்டாகும் அநுபவம்; “துவாதசாந்தப் பெருவெளியில் துரியங் கடந்த பரநாத, மூலத்தலம்” (மீனாட்சி. முத்தப்.1): "துரியங் கடந்த துவாதசாந்தப் பெருவெளிவளாகத் தொரு