பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

XIII

பெருக்கை அம்பிகையின்பாலுஞ் சார்த்தி இவ்வாசிரியர் கூறுவர்; "இறைவரும் நீயும் வந்து, வெவ்விய காலனென் மேல் வரும் போது வெளிநிற்கவே" (18), "அந்த, கன்கைப் பாசத்தில் அல்லற் படஇருந்தேனை...ஆண்டு கொண்ட, நேசத்தை யென்சொல்லுகேன்!” (32), “அடுங்கால் னெனைநடுங்க, அழைக்கும் பொழுதுவந் தஞ்ச லென்பாய்" (33); ஆவி வெங் கூற்றுக்கிட்ட, வரம்பை அடுத்து மறுகுமப் போதுவங் தஞ்ச லென்பாய்" (49);. எக்தித்தகப்பு வேலை வெங் காலனென் மேல்விடும் போது வெளிநில் கண்டாய்" (86).

அபிராமி என்ற திருநாமத்தின் சொற்பொருள்: போழகுடையவள் என்பது; "எம்பெரு மாட்டி தன் பேரழகே" (70), 'அழகுக் கொருவரு மொவ்வாத வல்லி' (71) என்பன இப்பொருளை நினைந்து பாடியனவே.

ஆசிரியர். சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் சோபான முறையில் அம்பிகையை வழிபட்டு அவ்வந் நிலையில் அம்பிகையின் திருவருளை நுகர்ந்தவர். ஆதலின் அருச்சித்துப் பூசிக்கும் உருவத் திருமேனியைக் கண்டு களித்தல் தொடங்கி, 'ஒளியே வெளியாகித். தம்மை மறந்து கருவி கரணம் கழன்று நிற்கும் ஆனந்தாநுபவம் வரையிலுள்ள நிலைகளை யெல்லாம் உணர்ந்து பாராட்டுகின்றார். அம்பிகையின் திருவுரு அழகையும் திருமேனிச் சோதியையும் தரிசித்து வாயாரப் பாடுகின்றார். பல பல இடங்களில் வெவ்வறு அம்சங்களை நிறுவிப் பல போல கோலத்தில் நின்று அருள் புரிபவள் பராசக்தி. அதனை உணர்ந்து அப்பெருமாட்டியின் அதிசயமான வடிவுகளை யெல்லாம் புகழ்ந்து பேசுகிறார். அம்பிகையோடு பிரிவின்றி நின்ற சிவத்தையும் இணைத்துக் காட்டுகின்றார். அம்பிகையின் அடியார்களது இயல்பையும் அருளால் அவர்கள் அடையும்