பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xvii

அகிமாலினி, அண்டமெல்லாம் பூத்தவள், அணங்கு, அணிக்கு அழகு, அணுகாதவர்க்குப் பிணி, அதிசயமான வடிவுடையாள், அர்தரி, அபிராமவல்லி, அபிராமி, அம்பிகை, அம்புயாதனத்தம்பிகை, அம்மை, அயரர் விருந்து, அரு, அருமருந்து, அருட்கடல், அருள், அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி, அழியாத கன்னிகை, அனைத்தையும் நீங்கி நிற்பாள், ஆடகத் தாமரை ஆரணங்கு, ஆத்தாள், ஆரணங்கு, ஆனந்தவல்லி, இசை வடிவாய் நின்ற நாயகி, இதயத்துப் பிறந்தவள், இமயப் பிடி, இமவான் பெற்ற கோமளம், இறைவாசெம்பாகத்து இருந்தவள், இறைவி, உடையாள், உமை, உலகெங்குமாய் நின்றாள், உள்ளத்தே விளைந்த கள், எந்தை துணைவி, எம்பிராட்டி, எம்பெருமாட்டி, எழுதரிய மேனி மயில், ஏதமிலாள் ஒளி, ஒன்பது கோணங்களில் உறைபவள், ஒன்று, கடம்பு சாத்தும் குழல் அணங்கு, கமலத்திரு, கலா வயிரவி மண்டலி, சறைக்கண்டனுக்கு மூத்தவள், கன்னி, கனங்குழை, காளி, கியாதி உடையவள், கிளி, குணக்குன்று, குவளைக்கண்ணி, கோமள யாமளை, கோமளவல்லி, சகலகலா மயில், சங்கரனார் மனைமங்கலம், சங்கரி, சடையோன் புடையாள், சண்டி, சாம்பவி, சாமளை, சித்தி, சித்திதரும் தெய்வம், சிந்தூர மேனியள், சிந்துரானன சுந்தரி, சிவகாமசுந்தரி, சிவம், சுந்தரவல்லி, சுந்தரி, சூலினி, செங்கண்மால் திருத்தங்கச்சி, செங்கலச முலையாள், செம்பட்டுடையாள், செய்யாள், ஞாலமெலாம் பெற்ற நாயகி, தலைவி, தவள், தாய், திரிபுரசுந்தரி, திரிபுரை, திரு, தெருள், தேவரைப் பெற்ற அம்மை, தையல்நாயகி, நாராயணி, நான்முகி, நீலி, நுண் நூல் இடையாள், பசும்பெண்கொடி, பஞ்ச சாயகி, பஞ்சபாணி, பஞ்சமி, பணிமொழி, பயிரவி, பராசக்தி, பராபரை, பரிமளப் பச்சைக் கொடி, பலவுரு, பனிமொழி, பாசாங்குசை, பாலினும் சொல் இனியாள்,அபிராமி——2