பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அபிராமி அந்தாதி

13

என்பதும் பொருந்தும். கண்ணி - தலையில் அணியும் அடையாள மாலை. "கர்ப்பூர வல்லிநின் பாதபத்மம், மதுமத் தொடுந்தம் முடிவைத்த வாமது ரேசரவர்” (மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை, 8). அம்பிகையின் ஊடல் தீர்க்கும் பொருட்டு இறைவன் தேவியை வணங்கியதைக் குறிப்பித்தவாறு.

11

"கண்ணிய துன்புகழ் கற்பதுன் -
நாமம் கசிந்துபத்தி
பண்ணிய துன்இரு பாதாம்
புயத்தில் பகல் இரவா
நண்ணிய துன்னை நயந்தோர்
அவையத்து நான் முன் செய்த
புண்ணியம் ஏதென் அம் மேபுவி
ஏழையும் பூத்தவளே"

(உரை) என் தாயே, ஏழுலகங்களையும் பெற்ற தேவியே, அடியேன் கருதுவது உன் புகழ்; கற்பது உன்னுடைய நாமம்: மனமுருகிப் பக்தி செய்வது, உன் இரண்டு திருவடித்தாமரை மலர்களிலேதான்; பகலும் இரவுமாகப் பொருந்தியது. உன்னை விரும்பிய மெய்யடியார்களது கூட்டத்தில், இவ்வளவுக்கும் காரணமாக அடியேன் முன் பிறவிகளில் செய்த புண்ணியச் செயல் யாது?

இத்தகைய செய்கைகள் முற்பிறப்பில் புண்ணியம் செய்தார்க்கே வாய்ப்பனவாதலின் இங்ஙனம் வினவினார்; "தவமும் தவமுடையார்க் காகும்" (குறள்) என்பதை நினைக்க. அவையமென்றது திருக்கூட்டத்தை முக்கரணத்தாலும் செய்யும் வழிபாட்டை முன்னர்க் கூறினார்.

12

பூத்தவ ளேபுவ னம்பதி
னான்கையும் பூத்தவண்ணம்
காத்தவ ளேபின் கரந்தவ
ளேகறைக் கண்டனுக்கு