பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அபிராமி அந்தாதி

15



பந்திப் பவர்அழி யாப்பர
மானந்தர் பாரில் உன்னைச்
சந்திப் பவர்க்கெளி தாம்எம்பி
ராட்டிநின் தண்ணளியே.

(உரை) எம் தலைவியாகிய அபிராமியே, உன்னை வழி படுவோர்கள் தேவர்களும் அசுரர்களும் ஆகிய இருவகை யினருமாவார்; நின்னைத் தியானம் செய்பவர்கள் நல்ல பிரமதேவரும் திருமாலும்; தம்உள்ளத்துள்ளே அன்பினால் கட்டி வைப்பவர், மேலான ஆனந்த உருவினராகிய சிவபெருமான்; ஆயினும் உன் குளிர்ந்த திருவருள் உலகில் நின்னைத் தரிசிப்பவர்களுக்கு எளிதாக இருக்கின்றது.

இத்துணை அரிய பொருளாக இருந்தும் இவ்வுலகத்தில் நின் திருவுருவைக் கோயில்களில் தரிசிப்பவர்களுக்கு பின் தண்ணளி எளிதா யிருந்தவண்ணம் வியத்தற்குரியதென்றவாறு. சந்தித்தல் - தரிசித்தல்; - "மயில் வாகனனைச் சந்திக்கிலேன்" (கந்தரலங்காரம்.) மூவரும் போற்றுதல்; 26.

14

தண்ணளிக் கென்றுமுன் னேபல
கோடி தவங்கள் செய்வார்
மண்ணளிக் கும்செல்வ மோபெறு
வார்மதி வானவர்தம்
விண்ணளிக் கும்செல்வ மும்அழி
யாமுத்தி வீடுமன்றோ
பண்ணளிக் கும்சொற் பரிமள
யாமளைப் பைங்கிளியே.

(உரை) பண்ணையொத்த இனிய மொழிகளைப் பேசும் பரிமளத் திருமேனியையுடைய யாமளையாகிய பச்சைக் கிளியே, உன்னுடைய திருவருளைப் பெற வேண்டுமென்று முன்பிறப்புக்களில் பலகோடி வகையான தவங்களைப்புரிந்த அன்பர்கள். இவ்வுலகத்தைப் பாதுகாக்கும் அரசச் செல்வம் ஒன்றைத்தானா பெறுவார்கள்? யாவரும் மதிக்கின்ற