பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

அபிராமி அந்தாதி

இவளே கடவுளர் யாவர்க்கும்
மேலை இறைவியுமாம்
துவளேன் இனிஒரு தெய்வம்உண்
டாகமெய்த் தொண்டுசெய்தே.

(உரை) நெஞ்சிற்கு, அணிய தியானப் பொருளாக உள்ள இப்பிராட்டி தவம் செய்யும் உமாதேவியே; எங்கள் பிரானாகிய சங்கரனார் மனைக்கு மங்கலமாகிய பத்தினி ஆகிய இவளே அவருக்கு ஒரு திறத்தில் தாயுமாயினாள்; ஆகையினால் அவளே தேவர் யாவருக்கும் மேலான தலைவியாவாள்; இவளைத் தெய்வமாகக் கொண்டு தொண்டு புரிதலல்லது வேறொரு தெய்வம் உண்டென்பதாக எண்ணி மெய்யால் தொழும்பு செய்து தளர்ச்சி அடையேன்.

தவள்: “மாத்தவளே" (13) என்றார் முன்னும். "மங்கல மென்ப மனைமாட்சி” என்றலின் பத்தினியென்னாது, 'மனைமங்கல மாமவள்' என்றார். சத்தி தத்துவத்தினின்றும் சுதாசிவ தத்துவம் தோன்றுதலின், 'அவர் தமக்கன்னையுமாயினள்' என்றார்: "இமவான் மகட்குத் தன்னுடைக் கேள்வன் மகன்" (திருவாசகம், பொற் சுண்ணம், 13); “தவளத்த நீறணி யுந்தடந் தோளண்ணல் தன்னொருபால், அவளத்த னாமக னாந்தில்லையான்" (திருச்சிற்றம்பலக் கோவை, 112); "சத்திதான் சிவத்தை யீன்றும்” (சிவஞான சித்தியார்); “தனிமுதல் யாமென்பார்க் கம்மனை யாயவர் தம்மனை யானவள்"

(மீனாட்சி. அம்மானை, 9); " அனகநாட கற்கெ மன்னை, மனைவிதாய்" (சிதம்பரச் செய்யுட் கோவை, 33).

44

தொண்டுசெய் யாதுநின் பாதம்
தொழாது துணிந்திச்சையே
பண்டுசெய் தார்உள ரோஇல
ரோஅப் பரிசடியேன்