பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

அபிராமி அந்தாதி

போதாவது பரமானந்த நிலையில் இருப்பவர்கள், மீட்டும் குடரும் நிணமும் இரத்தமும் சேர்ந்த கூடாகிய தேகத்தை அடைவார்களோ? அடையார்.

தேவியைத் தியானித்து இன்புற்றவருக்குப் பிறவி இல்லை யென்றபடி, சிவபெருமானைக் குன்றமன்றதற்கேற்ப அம்பிகையைக் கொடி என்றார்; "பங்காயோர், தமனிய மலைபடர் கொடியென வடிவு தழைந்தாய்" (மீனாட்சி, செங்கீரை, 101), பரிமளப் பச்சைக் கொடி: 15. குறிப்பு.

48

குரம்பை அடுத்துக் குடிபுக்க
ஆவிவெங் கூற்றுக்கிட்ட
வரம்பை அடுத்து மறுகும்அப்
போது வளைக்கை அமைத்
தரம்பை அடுத்த அரிவையர்
சூழவர் தஞ்சல் என்பாய்
நரம்பை அடுத்த இசைவடி
வாய்நின்ற நாயகியே.

(உரை) யாழ் நரம்பைப் பொருந்திய இசையின் வடிவாக நின்ற ஈசுவரியே, உடம்பாகிய கூட்டை அடுத்துக் குடியாகப் புகுந்த உயிரானது, வெவ்விய கூற்றுவனுக்கு இந்நாளில் நீ கொள்ளென்று பிரமன் குறித்த நாளாகிய எல்லையை அடைந்து சுழலுகின்ற அக்காலத்தில், நீ உன்னைத் தொழும் அரம்பையும் அவளை அடுத்த தேவ மகளிரும் சுற்றிச் சேவியாநிற்க எழுந்தருளி வந்து, நின் வளையை அணிந்த திருக்கரத்தை அமைத்துக் காட்டி, அஞ்சாதே என்று திருவாய் மலர்ந்தருளுவாயாக.

“உடம்பினுள் துச்சி லிருந்த உயிர்க்கு" (குறள்) என்பராதலின், 'குரம்பை யடுத்துக் குடிபுக்க ஆவி' என்றார். "இழைத்தநா ளெல்லை யகவா பிழைத்தொரீஇக் கூற்றங் குதித்துய்ந்தார் ஈங்கில்லை" (நாலடியார்) என்புழிக் கூறிய