பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

அபிராமி அந்தாதி



முன்னாய் நடுஎங்கு மாய்முடி
வாய முதல்விதன்னை
உன்னா தொழியினும் உன்னினும்
வேண்டுவ தொன்றில்லையே.

(உரை ) பல ஆயிர மின்னல்கள் ஒரு திருமேனியின் உருவெடுத்து விளங்குவதுபோன்ற கோலத்தையுடையவளும், அடியவர் நெஞ்சத்தில் துய்க்கும் ஆனந்தமயமான கொடி போன்றவளும், அரிய வேதத்திற்கு முன்னாகி நடு முழுவதுமாகி முடிவும் ஆகி முதல்வியும் ஆகிய அபிராமியை உலகத்து உயிர்கள் நினையா தொழிந்தாலும் நினைத்தாலும் அவளுக்கு, அவர்களால் வேண்டப்படுவது ஒரு பொருளும் இல்லை.

உயிர்கள் தம் நன்மையின் பொருட்டே தியானிக்கிறார்கள் என்றபடி. "பொன்னாற்ப்ர யோசனம் பொன்படைத் தாற்குண்டு பொன்படைத்தான், தன்னாற்ப்ர யோசனம் பொன்னுக்கங் கேதுண்டத் தன்மையைப்போல், உன்னாற்ப்ர யோசனம் வேணதெல் லாமுண்டிங் குன்றனக்கென், றன்னாற்ப்ர யோசனம் ஏதுண்டு காண்கச்சி யேகம்பனே" என்ற பட்டினத்தார் பாடல் இங்கே நினைத்தற்குரியது.

மின்வடிவு: “மின்கொடி.” (1). ஆனந்தவல்லி: 'பரமானந்தா' (லலிதா, 252); "பழவடியார் உள்ளத் தடத்திலூற்றெடுத்துப் பெருகு பரமா னந்தவெள்ளப் பெருக்கே" (மீனாட்சி. முத்தப். 2) முன் நடு முடி; முன்னே, பணை கொழுந்து வேர் என்றதை ஓர்க (2)

55



ஒன்றாய் அரும்பிப் பலவாய்
விரிந்திவ் வுலகெங்குமாய்
நின்றாள் அனைத்தையும் நீங்கிநிற்
பாள்என்றன் நெஞ்சினுள்ளே