பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

vii

கினார். "நன்றே வரினுந் தீதே விளைகினும் நானறிவ தொன்றேயும் இல்லை" என்ற பக்குவமுடையராதலின், இனி என் செய்வது? எல்லாம் அம்பிகையின் திருவருள்!” என்றெண்ணி உடனே அபிராமியம்மையைத் தியானித்து இவ்வந்தாதியைப் பாடத் தொடங்கினர். தம்மை உலகினர் பழி கூறுவதையும், அபிராமியின் உயர்வையும், தாம் பெற்ற அநுபவச் சிறப்பையும் இவ் வந்தாதிப் பாடல்களில் வெளியிடலானர்.

சரபோஜி அரசர் அபிராமி பட்டரைக் கவனியாமல் சென்றாலும் பட்டருடைய தோற்றம் அவர் உள்ளத்தே பதிந்து கிடந்தது. அன்று முன் இரவிலே சிறிது துயில் வரவே பரிபூரணமான சந்திரன் உதயமானாற் போலவும், அபிராமியம்மை தன் திருத்தோட்டைக் கழற்றி வீசியருள, அதுவே அமாவாசையிருட்டில் சுடர்விட்டுத் தண்ணிலவு பொழிந்து மதி என விளங்குவதைப் போலவும், அபிராமி பட்டர் தம் அருகே நின்று, அதோ பாருங்கள்; முழுமதி கதிர் வீசுகின்றது என்று காட்டுவதுபோலவும் கனவு கண்டார். அந்தக் கனவில் அம்பிகையின் தரிசனம் ஒருவாறு பெற்றமையால் அவர் உடலம் புளகித்து ஆனந்தம் மேலிட விழித்துணர்ந்தார். கனவிலே பெற்ற இன்பம் பின்னும் அவரைக் கவர்ந்தது, அப்பொழுதுதான் மன்னருக்கு அபிராமி பட்டர் மிகச் சிறந்த ஞானியென்பதும், செயற்கரிய செய்யும் பெரியாரென்பதும் புலப்பட்டன. உடனே பட்டரின் விடுநோக்கிச் சென்று அவரை வழிபட்டு, ”தங்கள் பெருமையை அறியாமல் புறக்கணித்த பிழையைப் பொறுக்க வேண்டும்” என்ருர் அம்பிகையின் திருவருளை நினைந்து வியந்த அபிராமி பட்டர், 'எல்லாம் அவள் திருவருள்!' என்று கூறினார்.

அப்போது சரபோஜி அரசர் அவரை வணங்கி, அவருக்குச் சில விளைநிலங்களை மானியமாக அளிக்க