பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அபிராமி அந்தாதி

67

அவர்களோடு பொருந்தி இன்புறும் பொன்னிறமாகிய கற்பகச் சோலையில் இந்திரராகி வீற்றிருப்பார்களா?

தேவியின் அடியார் இந்திர பதவியையும் மதியார் என்றபடி; "கூடுங் கொள்கையிற் கும்பிட லேயன்றி, வீடும் வேண்டா விறல்” (பெரிய புராணம்) என்பதை ஓர்க. மூவரும் போற்றுதல்: 7. திருவடியே வீடாக இருக்குமாதலின், “அடியிணையைப் பயனென்று கொண்டவர்" என்றார். “சேவடி படருஞ் செம்ம லுள்ளமொடு" (திருமுருகாற்றுப்படை. 62) என்பதன் உரையில் நச்சினார்க் கினியர், 'திருவடியே வீடாயிருக்கு மென்றார்; அது தென்னன் பெருந்துறையான், காட்டா தனவெல்லாங் காட்டிச் சிவங்காட்டித், தாட்டா மரைகாட்டித் தன் கருணைத் தேன்காட்டி" என்பதனாலும் பிறரும் திரு வடியைக் கூறுமாற்றானும் உணர்க' என்றெழுதியது இங்கே நினைக்கத் தக்கது.

'தங்குவரே', என்பதை உடம்பாடாக்கி, தேவியின் திருவடியையே பயனாகக் கொண்டவர் இந்திர பதவியை எளிதிற் பெறுவர் என்று கூறுதலும் ஒன்று.

74

தங்குவர் கற்பக தாருவின்
நீழலில் தாயர்இன்றி
மங்குவர் மண்ணில் வழுவாப்
பிறவியை மால்வரையும்
பொங்குவர் ஆழியும் ஈரேழ்
புவனமும் பூத்தஉந்திக்
கொங்கிவர் பூங்குழ லாள்திரு
மேனி குறித்தவரே.

(உரை) அட்ட குலாசலங்களையும் மேலே கிளரும் உப்புத் தன்மையையுடைய கடல் முதலிய ஏழு கடல்களையும் பதினான்கு புவனங்களையும் பெற்றெடுத்த திருவயிற்றையும், வாசனை பரவிய மலரை அணிந்த கூந்தலையும் உடைய