பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
103

முத்தியானந்தம்

சொல்கிறோம். மனம் உணர்வோடு இருக்கும்போது இன்பதுன்ப உணர்ச்சி உண்டாகும். முக்தி ஆனந்த மனம் அழிந்த நிலையில் உண்டாவது. அது ஆத்மாவின் நுகர்ச்சி அது நிழலில்லாச் சுடர் போன்றது; எல்லை அற்றது: அழியாதது; கூடாதது; குறையாதது; பங்கு போடப்படாதது.

ஆனந்தம் வேறு, இறைவன் வேறு அன்று. இறைவனே ஆனந்தம். ஆனந்தமே இறைவன். பரமாத்மா ஆனந்தமே வடிவமாக இருக்கிறான் என்று உபநிடதங்கள் கூறுகின்றன.

பரதேவதையாகிய அம்பிகை பரப்பிரம்மமே ஆதலின் அவள் அழியா முத்தியானந்தமாக இருக்கிறாள் அவளோடு இரண்டற ஒன்றுவதே ஆனந்தப் பிராப்தியாகும்.

இறைவி முத்தியுருவாக விளங்குபவள் என்பதைப் பின்னே,

"சத்தியும் சக்தி தழைக்கும் சிவமும்
தவமுயல்வார்
முத்தியும்.........ஆகி"(29)

என்று இவ்வாசிரியர் புலப்படுத்துவார்.

முக்திரூபிணி' என்பது'அம்மையின் திருநாமங்களில் ஒன்று (லலிதா, 737.)

உலகம் தோற்றும்போதே அநாதி காலத்தில் வேதத் தினால் தன்னை உணர வைத்த அம்பிகை பின்பு பல திரு அவதாரங்களைச் செய்து உயிர்களுக்குக் கருணை பாலித்துப் பார்வதியாக வந்து தன்னை உபாசனை செய்கிறவர்களைப் பந்தங்களினின்றும் விடுபடச் செய்து, முத்தியானந்தமாக நின்று ஒன்றுகிறவள் என்ற கருத்தை