பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 அபிராமி அந்தாதி

(ஆனந்த உருவமே தானாகி, என் அறிவாகி, நிரம்பிய அமுதம் போன்றவளாகி, ஆகாசம் ஈறான ஐம்பெரும் பூத்ங்களும் தன் வடிவாகப் பெற்ற தேவியினுடைய, நான்கு வேதங்களுக்கும் முடிவாக நிற்கும் திருவடித். தாமரையானது. வெண்ணிறத்தையுடைய மயானத்தைத் தம்முடைய ஆடும் இடமாக உடைய எம்பெருமானாகிய சிவபிரானது திருமுடி மாலையாக உள்ளது.

சரணாரவிந்தம் கண்ணியது என்று கூட்டுக. வான் அந்தமான-வானம் இறுதியாக உள்ள சரண அரவிந்தம் திருவடித் தாமரை. தவளநிறக் கான்-திருவெண்காடு என்றும் சொல்லலாம். அரவிந்தம் என்று மலராகச் சொன்னமையின் முடிக் கண்ணியது என்றார்.1

இது அபிராமி அந்தாதியில் பதினோராவது பாட்டு.