பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115 அபிராமி அந்தாதி

முன் என் வாயால் எத்தனை முறை உன் திருநாமங். களைச் சொல்லியிருப்பேன்!' என்கிறார் பட்டர்,

கற்பது உன் நாமம்

நாமத்தை ஒருமுறை இருமுறை சொல்வது கற்பது. ஆகாது. நாவினால் சொல்வதோடு அதன் பொருளை மனத்தினாற் சிந்தித்து ஈடுபடவேண்டும். சொல்வது, ஒதுவது, பயில்வது, கற்பது என்று பல படிகள் உண்டு. நாமத்தை நாவினால் ஒலிப்பது சொல்வதாகும். அதனைப் பலகால் சொல்வது ஒதுவதாகும்; பாராயணம் என்று சொல்வதுதான் ஒதுவது. பிறகு அதன் பொருளை உணர்ந்து பலகால் பழகுவது பயில்வது ஆகும். வாயினால் சொல்லி, அறிவினால் பொருளை அறிந்து, உணர்வினால் உணர்வதே கற்பது ஆகும்.

வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்'

என்பது ஒளவையின் உபதேசம். வாயினால் சொல்வி மனத்தினால் உணர்ந்து நின்றால்தான் அதற்கு மேற்பட்ட படிக்குப் போக முடியும். வாய்ச்சொல் நழுவி உள்ளம் அன்னையின் புகழையும் உருவத்தையும் எண்ணி இன் புறும் நிலைதான் முதலில் சொல்லியது. அதற்கு முன் நிகழ்ந்தது; வாயும் மனமும் இணைந்த செயலாகிய கற்பது. இங்கே வாக்கு மெல்ல மனத்தைப் பற்றிக் கொண்டு திருநாமப் பாராயணத்தில் ஈடுபடுகிறது. தியானம் என்ற படிக்கு முன்படி பாராயணம். புகழ் விரிவை உணர்வதற்கு முதற்படி திருநாமப் பயிற்சி. முதலில் ஒருவருடைய பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டு பிறகு அவருடைய பெருமையைத் தெளிவது: இயல்பு. அந்த முறையில் அன்னையின் நாமத்தைக் கற்றுக் கைவந்த பிறகு, அவள் புகழை எப்போதும் எண்ணும் நிலை வந்தது. காரிய காரண முறையில்