பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 - அபிராமி அந்தாதி

அம்பிகையின் எளிமையை, அளவற்ற செளலப்யத்தை, அபிராமிபட்டர் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வகையில் எண்ணிப் பார்த்து இன்புறுகிறவர். இப்போது ஒரு வகையில் அந்த எளிமையின் பெருமையைப் பாராட்டு. கிறார்.

இயல்பாகவே எளிய நிலையில் உள்ளவர், எல்லா ரோடும் கலந்து பழகுவதில் வியப்பு இல்லை. மிக உயர்ந்த நிலையில் உள்ளவர் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களுக்கு உபகாரம் செய்து கலந்து பழகுவதுதான் சிறப்பு. ஆகவே, எளியராக ஒருவர் பழகுகிறார் என்றால் அந்த எளிமை யின் சிறப்பை அவருடைய உயர்வை எண்ணிப் பார்த்தால் தான் உணரமுடியும். ஆட்டுக் குட்டி கீழே உள்ள புல்லைக் கொறிக்கும்போது அது தன் கழுத்தை வளைப்பது. சிறப்பாக நம் கண்ணுக்கு புலனாவதில்லை ஆனால் ஒட்டைச் சிவிங்கி தன் கழுத்தை வளைத்துப் புல்லை. மேயும் போது அந்தக் கழுத்தின் வளைவு நன்றாகத் தெரி கிறது. ஒரு தென்ன மர உயரத்தில் இருக்கிற தலை வளைந்து தரையை முட்டுகிறதே, அது எவ்வளவு வியக்கத் தகுந்த காட்சி!

ஆகவே எளிமையின் பெருமை. அது யாரிடம் நிகழ் கிறதோ அவர்களுடைய உயர்வினால் மிகுகிறது. ஏழையின் வீட்டுத் துக்க நிகழ்ச்சியை விசாரிக்க உறவினர் வருவது வியப்பன்று. ஊர் அதிகாரி வந்தால் அது சிறிது வியப்பு. தாசில்தார் வந்தால் சிறிது அதிகமான வியப்பு. கலெக்டர் வந்தால் வியப்பு மிகும். கவர்னரே வந்தார் என்றால் அது பெருவியப்பு. துக்கம் கேட்க வந்தவர்கள் கூட அதை மறந்து கவர்னரைப் பார்த்துக் கொண்டே நிற்பார்கள் -

. எம்பெருமாட்டியின் தண்ணளியை, உள்ளத்தையும். உயிரையும் குளிர்விக்கும் குளிர்ந்த கருணையை, சிறப்.