பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 அபிராமி அந்தாதி

கிறது. அதை ஒழுங்காகச் செய்தால் தான் பேரும் புகழும் வரும். எம்பெருமாட்டியின் ஆணையின் வழியே அந்தத் தொழிலை இவர் நடத்தி வருகிறார். இவருக்கு மகாமா தாவின் திருவருட்பலம் மிக அவசியமாக வேண்டும். அதனால்தான் வேறு எதையும் எண்ணாமல் சலனமின்றி அவள் திருவடியையே தியானம் செய்து கொண்டு இங்கே அமர்ந்திருக்கிறார். தனியான இடமாக இருக்கிறதென்று வந்து தியானத்தில் அமர்ந்திருக்க வேண்டும். பின்னாலே வந்து பிரமதேவர், அப்பா செய்கிற மாதரி நாமும் செய்ய லாம் என்று அமர்ந்து விட்டார் போலும்! அன்னையின் பெருமையை என்னவென்று சொல்வது!

சிந்திப்பவர் கற்றிசைமுகர் காரணர்.

இவ்வளவு பெரியவர்கள் தியானிக்கும் பெருமாட்டி அபிராமி. இன்னும் சற்றே உள்ளே போகலாம். இதுதான் எம்பிர்ாட்டியின் அந்தரங்க மண்டபம், இங்கே அவள் தனியே இருந்து இன்புறுவாள். அந்தத் தனிமையிலும் ஒருவர் குறுக்கிடுவார். வேறு யாரும் போக இயலாத இந்த அந்தரங்கச் சூழலிலே புகுபவர் அவர் ஒருவர்தாம். அவர் பரமானந்தமே வடிவமான காமேசுவரர். அவர் இந்த அறையில் வந்து அம்பிகைக்காக காத்திருப்பவர். இதோ இவருடைய தேசு பொருந்திய வடிவு தெரிகிறதே! இது என்ன? இவர்கடிடக் கண்ணை மூடிக்கொண்டிருக் கிறாரே? எல்லாருடைய தியானத்துக்கும் பொருளாக இருக்கும் இவர் எதற்காக கண்ணை மூடிக்கொண்டு யேர்கத்தில் இருக்கிறார்? .

உண்மையில் இவர்தாம் யோகம் செய்து பழகியவர். மற்றவர்களுக்கு அத்தின்ன பழக்கம் இல்லை. 'புத்தனாய்ப் பாடமாட்டேன் பரமனே பரம யோகி' ಗ್ಬಣ್ಣ தேவாரம் இவ்ரைத்தானே யோகியென்று செல்கிறது: இவர் யாரைத் தியானிக்கிறார்? ... •