பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று செல்வம் 147

ஒரு கனிமரம் இருக்கிறது. அதில் பல கனிகள் குலுங்குகின்றன. அதில் அடர்ந்த தழையும் மணம் பரவும் மலர்களும் உள்ளன. மரத்தின் பயன் கணிதான். என்றா லும் மரத்தின் நிழலும், மலரின் மணமும் இனிமையையே தருகின்றன.

சிலர் மரத்தில் உள்ள கனிகளை மட்டும் பெறுகிறார் கள். அது நல்ல பயன்தான். சிலர் நிழலையும் மலர் மணத்தையும் நுகர்கிறார்கள். அது பெரும் பயன் ஆகாது; பயனென்றே சொல்வதற்கு இல்லை. ஆனால் தழை, மலர் கணி என்னும் மூன்றினாலும் உண்டாகும் பயனைப் பெறு கிறவர்கள் சிறந்தவர்கள்.

மரத்தின் நிழலைப் போல இருப்பது இந்த வாழ்வில் உள்ள இன்பம்; மலரின் மணத்தைப் போல இருப்பது சொர்க்க இன்பம்; கனியைப் போல இருப்பது முத்தி இன்பம். இந்த மூன்று வாழ்வையும் இம்மை. மறுமை, மூத்தி என்றும் இகம், பரம், மோட்சம் என்றும், சொல் G(FF函场门”。 - -

அம்பிகையின் தண்ணளிக்காகத் தவம் செய்தவர்கள் இந்த மூன்றையும் சிறப்பாகப் பெறுவார்கள். முதலில் இந்த உலகில் நல்ல வண்ணம் வாழ்வார்கள்; அவர்கள் வாழ்வு இன்ப வாழ்வாகவே அமையும்.

இந்த உலக வாழ்வில் சிறந்தது அரசபோகம் என்பது பழைய காலந்து எண்ணம்; ராஜபோகம்' என்று சொல் வார்கள். இம்மை வாழ்வின் இன்பங்கள் எல்லாவற்றையும் நுகர்பவன் அரசன். அரச பதவியைவிட இந்த வாழ்வில் சிறந்தது இல்லை. இது பழங்காலத்தினர் எண்ணம். ஆதலின் இந்த உலகில் முழுமையான இன்ப வாழ்வில் வாழ்வார்கள் என்பதையே, அரசபதவி பெற்று இன்புறு வார்கள் என்று கூறுகிறார் ஆசிரியர். -