பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிசயமான கருணை 157

உருகுவார்கள். அபிராமிபட்டர் அத்தகைய பெருயவர் களின் வரிசையைச் சேர்ந்தவரே.

கிளியே கிளைஞர் மனத்தே

கிடந்து கிளர்ந்துஒளிரும்

ஒளியே, ஒளிரும்ஒளிக்குஇட

மே, எண்ணில் ஒன்றும்இல்லா

வெளியே, வெளிமுதல் பூதங்கள்

ஆகி விரிந்த அம்மே,

அளியேன் அறிவள விற்குஅள வானது

அதிசயமே!

  • கிளியைப் போன்ற திருமேனியை உடைய தேவி,. உன் உறவினராகிய அன்பர்களின் மனத்தே நிலைபெற்று ஒரு காலைக்கு ஒரு கால் விளங்கித் தோன்றும் ஒளியே, விளங்குகின்ற ஒளிக்கெல்லாம் ஆதாரப் பொருள்ே, எண்' னிப் பார்க்கும்போது எந்தத் தத்துவமும் ஆகாமல் எல்லாம் கடந்து நின்ற பரவெளியே, ஆகாசம் முதலிய ஐம்பெரும் பூதங்களுமாக விரிந்த தாயே, இத்துணைப் பெரியவளாகிய நீ இரங்கத்தக்க அடியேனது சிற்றறிவின் எல்லைக்கு உட்பட்டது வியப்புத் தருவதாகும்.*

- (கிளைஞர்-அன்பர். கிளர்தல்-மேன்மேலும் சிறந்து

விளங்குதல். எண்ணில்-ஆராய்தல்.) - . . .'; அம்பிகையின் எளிவந்த கருணையை எண்ணி வியந்த

வாறு இது. -

இது அபிராமி அந்தாதியில் 16ஆவது பாடல்.