பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனந்த வெள்ளம்

கோயில்கள் நிரம்பிய தமிழ்நாட்டில், விக்கிரக ஆராதனை அவசியமா? என்ற கேள்விக்கே இடம் இல்லை ஊருக்குப் பொதுவான கோயில், வீதிக்குப் பொதுவான கோயில், வீட்டில் பூஜை அறை என்று வைத்துப் பல மூர்த்திகளைத் தொன்று தொட்டு வழிபட்.ே வருகிறோம். அடையாளம், பெயர், உருவம் இல்லாத கடவுளுக்கு உருவம் அமைப்பது நியாயமா? என்று இவம் றின் உண்மையைத் தெரியாதவர்கள் கேட்கக் கூடும்.

நாம் வழிபடும் ஆலயங்களும் விக்கிரகங்களும், நாம் வாழ்கின்ற வீடும் நாம் எடுக்கும் உடம்பும் போன்றன அல்ல. விடும் உடம்பும் மனிதனுக்குப் பயன்படுவன: அதுபோலக் கடவுளுக்காக ஆலயமும் விக்கிரகமும் உண்டாகவில்லை. கடவுளை வழிபட்டுப் பயன் அடையும் பக்தர்களுக்காகவே அவை ஏற்பட்டன.

எந்தப் பொருளையாவது மனத்தில் எண்ணவேண்டு மானால் அந்தப் பொருளுக்கு ஒரு பெயரும் உருவமும் இருக்க வேண்டும். நாமரூப நாட்டம் உடையது மனம். அவை இல்லாவிட்டால் மனம் பற்றாது. இறைவன் உலகிலுள்ள உயிர்களைக் காப்பாற்றியருள உருவம் எடுத்து வருகிறான். அவன் குணம் இல்லாதவன்: உருவம் இல்லாதவன். ஆயினும் வேண்டுமானால் உருவம் எடுத்துக் கொண்டு வருவான். அவன் எல்லாம் வல்லவன்; அகடித கடனா சாமர்த்தியம் உள்ளவன். ஆதலின் அடியார்களைக் காப்பாற்ற வேண்டி உருவம் எடுத்துக்கொள்ளும் ஆற்றல் படைத்தவனாக இருக்கிறான். அடியார்களுக்கு நன்மை செய்யவேண்டுமென்ற கருணை உள்ளவன்.